22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
muniyandi vilas chicken curry 1621098071
அசைவ வகைகள்

முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 1/2 கிலோ

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)

* இஞ்சி – 1 இன்ச் (நறுக்கியது)

* பூண்டு – 3 பல் (நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* தேங்காய் பால் – 1 டேபிள் ஸ்பூன்

* பிரியாணி இலை – 2

* வரமிளகாய் – 2

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

* கறிவேப்பிலை – சிறிது

வறுத்து அரைப்பதற்கு…

* வரமிளகாய் – 6

* மல்லி விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்

* பச்சரிசி – 1 டீஸ்பூன்

* மிளகு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* கசகசா – 1 டீஸ்பூன்

* பொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* கிராம்பு – 2

* ஏலக்காய் – 1

* துருவிய தேங்காய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின்னர் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகுளைப் போட்டு, ஒரு 3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

* சிக்கன் துண்டுகளானது வெள்ளை நிறத்தில் மாறும் போது, அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

* பிறகு தேங்காய் பால் மற்றும் ஒரு கப் நீரை ஊற்றி கிளறி, குறைவான தீயில் மூடி வைத்து பத்து நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு தயார்.

Related posts

சிக்கன் தோசை செய்வது எப்படி?

nathan

வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி

nathan

சண்டே ஸ்பெஷல் – சிக்கன் 65,tamil samayal in tamil language,

nathan

ஆலு மட்டர் – (உருளைக்கிழங்கு பட்டாணி கறி)

nathan

ஆந்திரா ஸ்பெஷல்: கோங்குரா சிக்கன் குழம்பு

nathan

சிக்கன் ப்ரை / Chicken Fry

nathan

தயிர் சிக்கன்

nathan

ஸ்பைசி நண்டு மசாலா

nathan

சில்லி இறால் வறுவல் : செய்முறைகளுடன்…!

nathan