தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் – 5
சாதம் – 1 கப்
வர மிளகாய் – 2
தாளிக்க :
நல்ல எண்ணெய் 2 ஸ்பூன்,
கடுகு ஸ்பூன்,
உளுந்த பருப்பு ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 1
பெருங்காயம் – ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லி தழை – சிறிது
உப்பு – சுவைக்கு
செய்முறை:
• கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• சாதத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஆறவைக்கவும்.
• நெல்லிக்காய் விதை நீக்கி, மிளகாய், கல் உப்பு சேர்த்து அரைக்கவும்.
• அடுப்பில் 1 ஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்த பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்த உடன் பெருங்காயம், கறிவேப்பிலை, அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
• இதை சற்று ஆறவைத்த சோற்றில் சேர்த்து கிளறவும்.
• பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.