24.6 C
Chennai
Tuesday, Dec 24, 2024
greenfishcurry 10 1499662652
அழகு குறிப்புகள்

டேஸ்டியான க்ரீன் மீன் கறி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள்

1-2 பச்சை மிளகாய் (விதையுடன் அல்லது விதைகள் இல்லாமல்)
1 கூடு பூண்டு
1 டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது
1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலைகள் தண்டுடன்
1 டேபிள் ஸ்பூன் வெஜிடபிள் ஆயில்
2 நறுக்கிய வெங்காயம்
500 மில்லி தேங்காய் தண்ணீர்
ஷெஸ்ட்(லெமன் தோல்) மற்றும் ஒரு எலுமிச்சை ஜூஸ்
1 டேபிள் ஸ்பூன் பிஷ் சாஸ்
1/2 டேபிள் ஸ்பூன் பிரவுன் சுகர்
500 கிராம் தோலை நீக்கிய ஹேக் மீன் (காட் மீனின் ஒரு வகை), சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலைகள் போன்றவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும், வழுவழுவென்று அரைக்க கொஞ்சம் வெஜிடபிள் ஆயிலை தெளித்து தெளித்து அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்யை சூடேற்றி வெங்காயத்தை போட்டு 5 நிமிடங்கள், பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு அரைத்து வைத்த பேஸ்ட்டையும் கலந்து 2 நிமிடங்கள் வதக்கவும் .

தேங்காய் தண்ணீர், லெமன் ஜெஸ்ட்(zest), பிஷ் சாஸ் மற்றும் சுகர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு இதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும் .

இப்பொழுது அதனுடன் வெட்டிய மீன்கள் மற்றும் லெமன் ஜூஸ், உப்பு சேர்த்து மூடி விட வேண்டும். மிதமான தீயில் 3 நிமிடங்கள் மீன் நன்றாக வேகும் வரை வைக்க வேண்டும் .

வெதுவெதுப்பான சூட்டில் மீன்களை மட்டும் எடுத்து 4 பெளல்களில் நடுவே பிரித்து வைத்து தேங்காய் கிரேவியை சுற்றி ஊற்றி நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவ வேண்டும். கடைசியாக பச்சை பட்டாணியை சுற்றிலும் வைத்து அலங்கரியுங்கள்.

Related posts

கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்க!…

sangika

வர்ச்சியில் மிரட்டும் மிருணாள் தாக்கூரின் கிக்கான கிளாமர் போட்டோஸ்

nathan

குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. இது தான் பெரிய விடயம்..

sangika

புதினுக்கு இவ்வளவு நோய்களா.! உளவுத்துறை அதிர்ச்சி தகவல்

nathan

சூப்பர் டிப்ஸ் பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்

nathan

உங்களுக்கு தெரியுமா மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் தீர்வு தரும் சிற்றரத்தை

nathan

சூப்பரான இனிப்பான… மங்களூர் போண்டா

nathan

குதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமெனில் சில டிப்ஸ்!….

sangika

சர்க்கரை வள்ளி கிழங்கு உங்களுக்கு தெரியுமா எண்ணெய் வடியும் சருமத்திற்கு தீர்வு தரும்

nathan