28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
mc2
சட்னி வகைகள்

வெங்காய கார சட்னி

தேவையான பொருள்கள்
சின்ன வெங்காயம் orபெரிய வெங்காயம் -1 கப்
சின்ன வெங்காயம் -பொடியாக நறுக்கியது சிறிது
தக்காளி-1 பெரியது,or சின்ன தக்காளி 2
பூண்டு-5 பல்
கருவேப்பில்லை -சிறிது
தேங்காய்-2 சில்
உப்பு
எண்ணை ஒரு குழிகரண்டி
சிவப்பு மிளகாய்-5 (காரத்திற்கு ஏற்ப)
புளி -கொட்டைபாக்கு அளவு
கடுகு-சிறிது
உளுந்தபருப்பு-1 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை
1)கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் 1 1/2 டேபிள்ஸ்பூன் உளுந்தபருப்பை சிவப்பு மிளகாய் , பூண்டு பொன்னிறமாக வறுத்து அடுப்பை அனைத்து விட்டுஅதே சூட்டில் தேங்காய்ப்பூ புளி , கருவேப்பில்லை சிறிது போட்டு வதக்கவும்.இது ஆறிய உடன் மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து தனியாக வைக்கவும்.

2)மறுபடியும் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் ,மற்றும் தக்காளி போட்டு வதக்கி, இது ஆறிய உடன் மிக்சியில் அரைத்து .முதலில் அரைத்து வைத்து உள்ள உளுந்தபருப்பு, தேங்காய் கலவை உடன் உப்பு,தேவையான நீர் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
3)கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்(பெரிய வெங்காயம் நன்றாக இருக்காது), போட்டு வதக்கவும்,

வெங்காயம் நன்றாக வதக்கியதும் இந்த கலவையை சட்னி உடன் கலந்து விடவும்.. சின்ன வெங்காயம் போட்டு வதக்கி சேர்ப்பது சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.
சின்ன வெங்காயம் நறுக்க நேரம் இல்லை என்றால் தவிர்த்து விடலாம் அல்லது ஒருமுறை வெறும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்தும்,மற்றொரு முறை சின்ன வெங்காயம் வதக்கியும் செய்து பாருங்கள் ,சுவையில் வித்தியாசம் தெரியும்.

இட்லி,தோசை உடன் சாப்பிடலாம் .
குறிப்பு
1)அனைத்து பொருள்களும் எண்ணையில் வதக்கி அரைத்து வைத்து இருப்பதால் ,மீண்டும் கொதிக்க வைக்க தேவை இல்லை.தாளித்து மட்டும் சேர்த்தால் போதும்,
2)இதில் பாதி உளுத்தம்பருப்பு ,பாதி கடலைபருப்பு பொன்னிறமாக வறுத்தும், உளுத்தம்பருப்புக்கு பதிலாக கடலைபருப்பு சேர்த்தும் செய்யலாம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி செய்து பாருங்கள்
mc2

Related posts

சுவையான தக்காளி சட்னி செய்வது எப்படி

nathan

தக்காளி குருமா

nathan

சுவையான தக்காளி கடலைப்பருப்பு துவையல்

nathan

தோசை, இட்லி, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன் இந்த பீர்க்கங்காய் சட்னி…

sangika

சீனி சம்பல்

nathan

கார பூண்டு சட்னி!

nathan

சுட்டக் கத்தரிக்காய் சட்னி

nathan

செட்டிநாடு கதம்ப சட்னி

nathan

சுவையான கடலைப்பருப்பு சட்னி

nathan