25.6 C
Chennai
Thursday, Nov 14, 2024
chicken roast masala 30 1454139141
அசைவ வகைகள்

கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா

ஆந்திரா ரெசிபிக்கள் மட்டும் தான் காரமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம், கேரளா ரெசிபிக்களும் மிகவும் காரமாக இருக்கும். அதிலும் மீன், சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொண்டால், ஆந்திராவை மிஞ்சும் அளவில் காரம் இருக்கும். அதில் ஒன்றான கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலாவை எப்படி செய்வதென்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரெசிபி விடுமுறை நாட்களில் செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ஒன்று. சரி, இப்போது அந்த கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலாவின் செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


chicken roast masala 30 1454139141
தேவையான பொருட்கள்:

சிக்கன் – 500 கிராம்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா/சிக்கன் மசாலா – 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கன் நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்த பின், அதனை தனியாக வைத்துக் கொள்ளவும். பின் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, சிக்கன் துண்டுகளை போட்டு பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின் அந்த சிக்கனை குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.

பின் அதில் மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் குக்கரில் உள்ள வேக வைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து 5-6 நிமிடம் வேக வைக்கவும். எண்ணெய் தனியாக பிரியும் போது அதனை இறக்கி பரிமாறினால், கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா ரெடி!!!

Related posts

ஃபிங்கர் சிக்கன்

nathan

சில்லி இறால் வறுவல் : செய்முறைகளுடன்…!

nathan

சிக்கன் தோசை செய்வது எப்படி?

nathan

தக்காளி ஆம்லெட்

nathan

ஹைதராபாத் சிக்கன் 65 / Hyderabad chicken 65 Masala ,tamil samayal kurippu

nathan

சுவையான முட்டை குருமா செய்வது எப்படி

nathan

சுவையான மசாலா மீன் ப்ரை

nathan

சமையல் குறிப்பு: பொரித்த மீன்! ~ பெட்டகம்

nathan

சுவையான உருளைக்கிழங்கு மீன் குழம்பு

nathan