மருத்துவ குறிப்பு

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்கனுமா?

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் வரும்போது வரும் வலிக்கு Dysmenorrhoea என்று பெயர். இதனால் அன்றாட வாழ்வின் செயல்கள் பாதிக்கப்படும். அது தசைப்பிடிப்பு போல இருக்கும். கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் வலி அதிகமாக இருக்கும்.

சில நேரங்களில் குத்துவது போலவும், மந்தமாகவும், வாந்தி எடுக்கும் தன்மையுடையதாகவும், எரிச்சலாகவும், அழுத்தத்துடனும் காணப்படும்.

இதனை மாத்திரைகள் கொண்டு குணப்படுத்துவதை விட ஒரு சில இயற்கை வழிகள் மூலம் சரி செய்ய முடியும் . தற்போது அவற்றை பார்ப்போம்.

இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்துக் குடிப்பதால் அடி வயிற்று வலி குறையும். அதேபோல் உடல் வலியும் குறையும். புத்துணர்ச்சியாக இருக்கும். இது மாதவிடாய் தல்லிப்போதலையும் தடுக்கும்.

அடிவயிற்றில் ஹீட்டிங் பேட் அல்லது மண்ணை சூடு படுத்தி துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் அடிவயிற்றுவலி குறையும்.

அரை அல்லது கால் இஞ்சு பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் அடி வயிற்று வலிக் குறையும். அதன் ருசி அத்தனை நன்றாக இல்லை என்றாலும் குடித்தால் பலன் அதிகம்.

பப்பாளியை மாதவிடாய் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே உண்டு வந்தால் கர்பப்பை வலுபெற்று அதன் வேலையைச் சிறப்பாகச் செய்யும்.

ஆளி விதைகள் கர்பப்பை தடையில்லாமல் வேலை செய்ய உதவுகிறது தினமும் ஒரு மேசைக்கரண்டி உண்டு வந்தால் வயிறு இறுக்கிப்பிடித்தல், வலி போன்ற பிரச்னைகள் இருக்காது.
வெந்தையத்தை வெறும் வயிற்றில் உண்பதால் வயிறு இறுக்கிப்பிடித்தல் குறையும். வெந்தையத்தை இரவு முழுவதும் ஊற வைத்து பேஸ்டாக்கி ஒரு ஸ்பூன் உண்ணலாம்.
சோம்பை அரைத்து வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா நினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….!

nathan

விஞ்ஞானிகள் தகவல்! புற்றுநோயை அகற்றும் வைரஸ் கண்டுபிடிப்பு!

nathan

உங்களுக்கு சொடக்கு தக்காளியின் மருத்துவ பயன்கள் என்னென்ன தெரியுமா?இத படிங்க!

nathan

உட்கார்ந்த இடத்திலயே வேலைப் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள்

nathan

மூக்கடைப்பிலிருந்து மாத்திரையின்றி எளிதில் நிவாரணம் பெற !இதை படிங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…யோனி வெளியேற்றத்தின்போது ஏன் உங்க உள்ளாடையின் நிறம் மாறுது தெரியுமா?

nathan

விபத்தை உருவாக்கும் ‘வேகத்தடைகள்’

nathan

உங்களுக்கு தெரியுமா? ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!

nathan

அம்மா என்பவள் யார்?

nathan