29.6 C
Chennai
Monday, Dec 23, 2024
367bc0d8 0d39 46d8 bb25 3aa1f227d6a7 S secvpf.gif
உடல் பயிற்சி

பெண்களே உங்கள் தொப்பைக்கு குட்பை சொல்லும் பயிற்சி

இந்தக்காலத்தில் ஆண்களிற்கு மட்டுமல்ல, பெண்களிற்கும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது தொப்பை. முன்னர்தான், தங்கள் கால்விரல்களை பார்க்க முடியாமல் வயதான ஆண்கள் தவித்தார்கள். இப்போது அந்த நிலைமை இளம்பெண்களுக்கு கூட ஏற்பட்டுள்ளது.

தற்போதை உணவு பழக்கவழக்கமும், தொழில்முறை மாற்றமும் இதற்கான முக்கிய காரணமாக உள்ளது. இப்பொழுது இளம்பெண்கள் வீட்டுவேலைகளில் அதிக ஆர்வம் காட்டாதமை இன்னொரு காரணம். உணவில் அதிக எண்ணெய் உள்ளமை, கட்டுக்கோப்பான உணவுப்பழக்கமின்மை போன்றவற்றால் இந்த நிலை ஏற்படுகிறது.

பெண்களிற்கு எப்பொழுதும் கொடியிடைதானே அழகு. இந்த திடீர் தொப்பைகளினால் பெண்கள் அடையும் சங்கடங்களும் அனேகம். உங்களுக்காகவே மிக எளிய, பயனுள்ள சில உடற்பயிற்சிகளை பார்க்கலாம்.

• படம் Aஇல் காட்டியபடி மல்லாந்து நேராக படுக்கவும். பின்னர், இடதுகாலை நேராக மேல் நோக்கி தூக்கி, வலது கையினால் கால்நுனி விரலை தொட முயற்சிக்கவும். இதனை செய்யும் போது, அடிவயிறு இறுகும். சற்று சிரமத்தை கொடுக்கலாம். எனினும், உடலை உறுதியாக்கி முறைமாற்றி மாற்றி செய்யவும். ஆரம்பத்தில் 15 தடவைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

• அதிக பயனைத்தரும் சற்று கடினமான பயிற்சி இது. மல்லாந்து படுத்து, முதலில் புறங்கைகளை முதுகின் பின்னால் ஆதாரமாக கொடுத்து, கால்களையும், தலைப்பகுதியையும் மேல்நோக்கி தூக்கவும். இடுப்பு பகுதி மட்டுமே தரையில் பதிந்திருக்கட்டும். கால்களை 45 பாகையில் வைத்திருங்கள். இந்த நிலையில் சிறிது நேரம் இருந்தபடி கால்களை முன்பின்னாகவும், மேல் கீழாகவும் நகர்த்தவும்.

இடைவெளி விட்டுவிட்டு ஐந்து ஐந்து நிமிடங்கள் இந்த நிலையில் இருக்க முயலுங்கள். பின்னர், கைகளை பக்கவாட்டாக நகர்த்தி படிப்படியாக முகத்தை முன்னோக்கி நகர்த்துங்கள். இதேசமயத்தில் கால்களை படத்தில் உள்ளதைப் போல மடித்து முகத்தை நோக்கி கொண்டு வாருங்கள்.
இடுப்பு மட்டும் தரையில் படிந்திருக்க, வேறு ஆதாரங்கள் இல்லாமலேயே முழங்கால்களை முகத்தால் தொடும் இலங்கை நோக்கி முயலவும். ஆரம்பத்தில் முடியாவிட்டாலும் சில நாட்களின் பின்னர் சாத்தியமாகும். இந்த கடினமாக இருந்தாலும் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது
367bc0d8 0d39 46d8 bb25 3aa1f227d6a7 S secvpf.gif

Related posts

சிக்கென்ற இடை தரும் சில யோகாசனங்கள்(beauty tips in tamil)

nathan

பின்னழகை அழகாக்கும் பயிற்சி

nathan

உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் உடற்பயிற்சி

nathan

தொடைத் தசையை வலுவாக்கும் லெக் ரொட்டேஷன் பயிற்சி

nathan

நீங்கள் உடல் எடையை குறைக்கனும் இல்லையென்றால் உடலை நல்ல கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா?

sangika

தொப்பையை வேகமாக குறைக்கும் 4 யோகாசனம்

nathan

தினசரி உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

nathan

கழுத்துவலியை குறைக்கும் அனுசாசன் முத்திரை

nathan

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஸ்கிப்பிங் பயிற்சி

nathan