நன்கு பழுத்த தக்காளி – 5
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 6 பல்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1.முதலில் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.அடுத்ததாக ஒரு கடாயில் வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. பின்னர்வெங்காயம் சேர்த்து வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்,அதில் 300 மில்லி தண்ணீர் (அ) கால் லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.
5.மிதமான தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.
6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து,அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.
7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்