தேவையானவை:
ரவை – கால் கிலோ
சர்க்கரை – 100 கிராம்
முந்திரி – 12 (மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்)
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு.
செய்முறை:
ரவையை நெய்யில் வறுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். இதனுடன் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்துகொள்ளவும். வாணலியில் சர்க்கரையுடன் சிறிது நீர் சேர்த்து பாகு காய்ச்சி. ரவை கலவையை அதில் சேர்த்து நன்கு கிளறவும் (அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறவும்). திரண்டு வரும் சமயம் நெய் தடவிய தட்டில் பரப்பி தட்டிவிடவும். ஆறியதும், கத்தியால் கீறி சிறு துண்டுகள் போடவும்.