29.1 C
Chennai
Monday, Nov 18, 2024
images2
சைவம்

காளான் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள் :

காளான் – 10
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
சோள மாவு – 4 ஸ்பூன்
மைதா – 2 ஸ்பூன்
சோயா சாஸ் – 2’ஸ்பூன்
உப்பு – 1ஸ்பூன்
எண்ணெய் – 2 கப்
வெங்காயம் – 1
சில்லி சாஸ் – 1 ஸ்பூன்
தக்காளி கெட்சப் – 1 1/2 ஸ்பூன்

செய்முறை:

ஒரு பௌலில் சோள மாவு, மைதா, 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 ஸ்பூன் சோயா சாஸ், 1/2 ஸ்பூன் உப்பு,தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாய் அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ள வேண்டும்.
பிறகு வேறு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு மற்றும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு மற்றொரு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும்.சுவையான காளான் மஞ்சூரியன் ரெடி.

images2

Related posts

கப்பக்கறி

nathan

வேர்க்கடலை குழம்பு செய்வது எப்படி

nathan

கத்தரிக்காய் – முருங்கைக்காய் சாப்ஸ் செய்யும் முறைகள்

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்

nathan

கறிவேப்பிலை குழம்பு

nathan

ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதம்

nathan

கத்தரிக்காய், முருங்கைக்காய், குடைமிளகாய் மசாலா : விடியோ இணைப்பு

nathan

சுவையான வேர்க்கடலை புளிக்குழம்பு

nathan

பேச்சுலர்களுக்கான… பருப்பு கடையல்

nathan