22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
mutton onion masala 1636804633
சமையல் குறிப்புகள்

மட்டன் வெங்காய மசாலா

தேவையான பொருட்கள்:

* மட்டன் – 1/2 கிலோ

* தேங்காய் எண்ணெய் – 1/2 கப்

ஹோட்டலில் மட்டும் எப்படி உணவோட சுவை வேற லெவலில் இருக்கு? அந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க! ஹோட்டலில் மட்டும் எப்படி உணவோட சுவை வேற லெவலில் இருக்கு? அந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க!

* சோம்பு – 2 டீஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* ஏலக்காய் – 4

புதினா தொக்குபுதினா தொக்கு

* கிராம்பு – 4

* பிரியாணி இலை – 1

* சீரகம் – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 1/2 கிலோ

* இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்

* பச்சை மிளகாய் – 2

* தக்காளி – 3 (அரைத்துக் கொள்ளவும்)

* காஷ்மீரி மிளகாய் தூள் – 3 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* சீரகத் தூள் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அந்த மட்டனில் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மட்டனை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, அதை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.

* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு தூசி நன்கு வதக்க வேண்டும்.

* பின் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.

* அடுத்து, அதில் மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.

* பின்பு வேக வைத்துள்ள மட்டன் மற்றும் நீரை ஊற்றி கிளறி, வாணலியை மூடி வைத்து, குறைவான தீயில் 15 நிமிடம் வேக வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மட்டன் வெங்காய மசாலா தயார்.

Related posts

சுவையான மீல் மேக்கர் வெஜிடேபிள் குருமா

nathan

இலங்கை ஸ்பெஷல் கத்திரிக்காய் கிரேவி!ஆஹா பிரமாதம்

nathan

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சாம்பார்

nathan

கத்திரிக்காய் மசாலா குழம்பு

nathan

பச்சை பயறு கிரேவி

nathan

சீஸி ரைஸ் பாப்பர்ஸ்

nathan

முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு

nathan

என் சமையலறையில்!

nathan

சமையல் மட்டும் முக்கியம் இல்லை இவற்றையும் கருத்தில் எடுங்கள்!

sangika