28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
19686 1587971638143511 5827667471051679062 n
அசைவ வகைகள்

ப்ரைடு சிக்கன்

தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 10
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்ழுன்
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 5
பூண்டு – 5 பற்கள் (நறுக்கியது)
வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
*ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம், கடுகு, மிளகு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை போட்டு வாசனை வரும் வரை வறுத்து, பின் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

*பின்னர் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை வடித்துவிட்டு, அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் ஒரு டீஸ்பூன் தனியாக வைத்துக் கொண்டு, மீதமுள்ளதை சேர்த்து, அத்துடன் உப்பு சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தனியாக எடுத்த வைத்த பொடியை போட்டு, அத்துடன் வெங்காயம், பூண்டு சேர்த்து 2-3 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

*அதில் மிளகாய் தூள் சேர்த்து பிரட்ட வேண்டும். பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து தீயை குறைவில் வைத்து 10 நிமிடம் வறுக்க வேண்டும். அடுத்து அதில் சிறிது வினிகரை தூவி பிரட்டி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால்,ப்ரைடு சிக்கன் ரெடி!!!

19686 1587971638143511 5827667471051679062 n

Related posts

ஆட்டிறச்சிக் குழம்பு

nathan

மசாலா மீன் வறுவல்

nathan

சிக்கன் சுக்கா : செய்முறைகளுடன்…!​

nathan

சைனீஸ் எக் நூடுல்ஸ் செய்ய வேண்டுமா?

nathan

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

nathan

பேச்சுலர்களுக்கான… உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு

nathan

நெத்திலி மீன் வறுவல்

nathan

சிக்கன் வறுவல்

nathan

சூப்பரான சைனீஸ் ப்ரைடு ரைஸ்

nathan