33.9 C
Chennai
Wednesday, Jun 26, 2024
tamil beauty in senema
இளமையாக இருக்க

பெண்களுக்கு பயனுள்ள 15 கட்டளைகள்

உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கோ, அருகில் வசிப்பவர்களுக்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் சரியான

உள்ளாடைகள் அணிவது அவசியம். இறுக்கமான உள்ளாடைகளை அணிவது பல்வேறு உடல் தொந்தரவுகளுக்கு காரணமாகும். அதுபோல் தொள தொள உள்ளாடைகளும் அணியக்கூடாது. எப்போதும் பொருத்தமான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும். பெண்கள் புதிதாக தொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் முக்கியமாக தொழில் நேர்த்தியை கற்றுக்கொள்ள வேண்டும். நட்பான அணுகுமுறை அவர்கள் முன்னேற்றத்தின் படிக்கல் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சிலர் ஹோட்டலில் சுவை நன்றாக இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள். ஆனால் வீட்டில் சமைக்கும் உணவில்தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. வீட்டில் சாதம், கூட்டு, பொரியல் ஆகியவற்றை சுவையாக சமைப்பது எப்படி என்பதை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி பல தகவல்கள் புத்தகங்களிலும், இணையதளங்களிலும் கிடைக்கின்றன. வீட்டில் பொழுதுபோக்குக்காக ஒதுக்கப்படும் நேரங்களில் இசையை ஈடுபாட்டுடன் கேட்கலாம். மனது இலகுவாகும். டி.வி பார்க்கும் போது அருகில் இருப்பவர்கள் திடீரென உங்கள் மீது விழுந்தாலோ, அருகில் உள்ள மேஜையிலிருந்து யாராவது இருமினாலோ உங்களுக்கு எரிச்சல் வரும் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலிலே நீங்களாகவே அந்த மாதிரியான தொந்தரவுக்கு இடம் கொடுக்காமல் தள்ளி உட்கார்ந்து விடுங்கள். வீட்டில் பொருள்கள் ஆங்காங்கே ஒழுங்கு இல்லாமல் சிதறிக் கிடந்தால் எரிச்சல் ஏற்படும். இப்படி சிதறிக் கிடக்கும் பொருள்களை ஒழுங்குபடுத்தலாம். மேலும் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் சேகரிக்கும் நல்ல பழக்கத்தையும் கற்றுக் கொள்ளலாம். குடிரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்திடுங்கள். கொதிக்க வைத்து ஆறியபின் அதை குடிநீராக அருந்துங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் உடல் சூடு குறையும். சீரக தண்ணீர் உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்க உதவும். வீட்டில் தனியாக இருக்கும் போது திருடர்கள் உங்களை தாக்கும் நோக்கத்தோடு வந்தால் அவர்களிடமிருந்து தப்பிக்க காரத்தே போன்ற கலைகளை தெரிந்து வைத்திருங்கள். தற்காப்பு கலை எதுவும் தெரிந்திருக்காவிட்டாலும் உங்கள் மனது எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்கட்டும். பெண்கள் தொழில், படிப்பு போன்ற காரணங்களுக்காக வெளியூர்களில் தனியாக வசிக்க நேரிடலாம். அந்த மாதிரியான வேளைகளில் தனியாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்படி இருபதால் மனரீதியாக தைரியம் கிடைக்கும். பெண்கள் பணத்தை சம்பாதிப்பதை விடவும், அதை சேமிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். நுறு ருபாய் என்றாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்தே முதலீடு செய்யவேண்டும். திடீரென உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் அதிக பேர் வந்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அந்த நேரங்களில் டென்ஷன் ஆகாமல் இன்முகத் தோடு வேலையை பாருங்கள். உங்கள் முகத்தில் தோன்றும் புன்னகையே விருந்தாளிகளின் பாதி பசியை போக்கிவிடும். புத்தகங்களை படிப்பது போல் சிறந்த பொக்கிஷம் வேறென்றும் இல்லை. நல்ல நல்ல சிந்தனை உள்ள புத்தகங்களைம், வரலாற்று பதிவுகளையும் படிப்ப தன் முலம் பல விஷயங்களை வீட்டில் இருந்தவாறு தெரிந்து கொள்ளலாம். தினமும் அதிகாலை 5 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். வெயில் வரும் முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுவது நல்லது.

tamil beauty in senema

Related posts

என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள, இதப்படிங்க!

nathan

நீங்க நீண்ட நாள் இளமையா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அதிகம் சாப்பிடுங்க…

nathan

தொடைகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைப்பதற்கான சில டிப்ஸ்…!

nathan

முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடும் வழிகள்

nathan

62 வயதிலும் ஜாக்கிஜான் எப்படி இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார்?

nathan

வயதானாலும் அழகும் இளமையும் மாறாமல் இருக்க என்ன செய்யனும்?

nathan

உங்களுக்கு தெரியுமா வயதாவதை தள்ளி போட உதவும் சில ஆரோக்கியமான உணவுகள்

nathan

அசிங்கமாக தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்றும் எளிய வழிகள்!

nathan

ஒரே வாரத்தில் உங்கள் இளமையை திரும்ப பெற வேண்டுமா? இதைப் படிங்க.

nathan