28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
7b375676 a076 4a9e 8958 7d51def85e26 S secvpf
மருத்துவ குறிப்பு

பெண்கள் விவாகரத்து செய்ய கூறும் காரணங்கள்

பெண்களும் விவாகரத்து கோரி நீதிமன்றம் படியேறும் காலம் வந்துவிட்டது. இப்போது பெண்கள் ஆண்களை ஏன் விவாகரத்து செய்ய

நினைக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்..

* கணவன்மார்கள் தங்கள் மனைவிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்தால், பெண்கள் விவாகரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். திருமணமான

போதிலும் கூட, ஆண்களுக்கு சபல புத்தி இருக்கக்கூடும். பிற பெண்களின் வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள். இதனைப்

பெண்களால் சகித்துக் கொள்ள முடியாமல் தான் பெண்கள் விவாகரத்தை விரும்புகிறார்கள்.

* சுயமாக சம்பாதிக்கும் பெண்ணாக இருந்தாலும், அவர்கள் விவாகரத்து கோருவதற்கு வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக கணவன்மார்கள்

முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலோ அல்லது தாங்க முடியாத குணாதிசயத்தோடு நடந்தாலோ, பெண்கள் இந்த முடிவை

எடுப்பார்கள். ஏனெனல் நிதி விஷயத்தில் யாரையும் சாராமல் சுயமாக சம்பாதிப்பதால், பெண்களுக்கு இந்த தைரியம் வருகிறது.

* திருமணமான பெண்ணுக்கு மற்ற ஆணுடன் ஈர்ப்பு அல்லது தொடர்பு இருந்தாலும், அது அப்பெண்ணை விவாகரத்து கேட்க தூண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் பல பெண்களுக்கு பிற ஆண்களின் மேல் காதல் வருவதால், அவரை மணந்து கொள்ள தற்போதைய

கணவனை விவாகரத்து செய்ய விரும்புவார்கள்.

* குடும்ப சுமைகள் மற்றும் பிரச்சனைகளும் கூட ஒரு பெண் விவாகரத்து கோர ஒரு காரணமாகும். சில சமயம் பெண்களுக்கு

மாமியாரின் தொந்தரவு அதிகரிக்கலாம். மாமியார் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கலாம். இது பெண்களுக்கு பிடிக்காமல்

போகலாம்.

பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவு இல்லாததாலும், பிரச்சனைகள் மூண்டு விவாகரத்தில் போய் நிற்கிறது.

மேலும் இக்காலத்து பெண்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் தன்னுடைய திருமண வாழ்வில் தலையிடுவதை விரும்புவதில்லை.

* கணவன் உடலுறவில் தகுதியில்லாமல் இருந்தாலும், அந்த காரணத்திற்காகவும் ஒரு பெண் விவாகரத்து கோருவாள்.

* மனைவியை அடிப்பதனால் கூட ஒரு பெண் தன் கணவனை விட்டு விலக விவாகரத்தை எதிர்பார்க்கும் ஒரு காரணமாகும்.

7b375676 a076 4a9e 8958 7d51def85e26 S secvpf

Related posts

தடுப்பூசிகள் – கம்ப்ளீட் கைடு

nathan

தெரிஞ்சிக்கங்க…பித்தம் தெடர்பான பிரச்சினைகளை எளிய முறையில் போக்க இதோ சில மருத்துவ குறிப்புகள்

nathan

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க 10 டிப்ஸ்!

nathan

பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணங்கள்

nathan

உடல் பிணி போக்கும் வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

nathan

மாதவிடாயில் இத்தனை பிரச்சனைகள் உள்ளது?எப்படி மீளலாம்?

nathan

40 வயதில் தொடக்கத்தில் கண்களுக்கு சில எளிமையான பயிற்சிகள்

nathan

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இதோ சில வழிகள்! !

nathan

தெரிஞ்சிக்கங்க…தேமல் நோய் வருவதற்கான காரணமும்.. தீர்க்கும் வழிமுறைகளும் இதோ

nathan