28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
cb663ac7 75fc 4ccd 931a
பெண்கள் மருத்துவம்

நச்சுக்கொடி பிரிதல் -ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டியது

Placenta எனப்படும் நச்சுக் கொடி குழந்தைக்கு தேவையான பாதர்த்தங்களைத் தாயில் இருந்து எடுத்து குழந்தைக்கு வழங்குவதோடு குழந்தையில் இருந்து கழிவுகளை தாயின் குழந்தைக்கு அனுப்பும் உறுப்பாகும். இது வழமையாக குழந்தை பிறந்த பின்பே கருப்பையில் இருந்து பிரிந்து வெளியேறும். ஆனால் சில வேளைகளில் குழந்தை பிறப்பதற்கு முன்னமே இதுகருப்பையில் இருந்து பிரிந்து வெளியேறலாம். இது ஆங்கிலத்திலே Placental abruption எனப்படும் .இது மிகவும் அபாயகரமானது. குழந்தை பிறப்பதற்கு முன்னமே நச்சுக் கொடி கருப்பையில் இருந்து பிரிவதால் குழந்தைக்குத் தேவையான ஆக்ஸிஜன் உட்பட்ட முக்கிய பதார்த்தங்கள் கிடைக்காமல் போவதால் குழந்தை கருப்பையிலேயே இறந்து போய் விடலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் எவ்வளவு விரைவாக குழந்தை பிறக்கச் செய்யப் பட முடியோ அவ்வளவு விரைவாக பிறக்கச் செய்யப்பட வேண்டும். அநேகமான சந்தர்ப்பங்களில் சிசேரியன் செய்ய வேண்டி வரலாம். ஆனாலும் சில வேளைகளில் கருப்பைக் வாயில் போதியளவு விரிவடைந்து இருந்தால் சீசர் செய்யாமல் ஆயுதங்கள் ..பாவிப்பதன் மூலம் குழந்தை பிறக்கச்செய்யப்படலாம். .

பொதுவாக இது கர்ப்பம் தரித்து 5-6 மாத காலத்திற்குப் பின்பு எப்போதும் ஏற்படலாம்.

அறிகுறிகள்.

1.தொடர்ச்சியான வயிற்று வலி (பிரசவ வலி விட்டு விட்டே ஏற்படும்) விட்டு விட்டு ஏற்படாமல் தொடர்ச்சியாக வயிறு வலி ஏற்பட்டால் அது நச்சுக் கொடி பிரிந்ததால் இருக்கலாம்.

2.பிள்ளைத் துடிப்புக் குறைதல்

3.மயக்கம் வருவது போன்ற உணர்வு

4.சிலவேளைகளில் வயிற்று வலியுடன் சிறிதளவு ரத்தம் யோனி(பிறப்புறுப்பு) வழியே வெளிப்படலாம்.

மேற்சொன்ன அறிகுறிகள் உள்ள கர்ப்பிணிகள் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும். இது எவருக்கு வேண்டுமானாலும் எந்தவிதமான காரணம் இல்லாமலும் ஏற்படலாம்.

ஆனாலும் பலமாக வயிற்றிலே அடிபடுவதும் இந்த பிரச்சினையை ஏற்படுத்தலாம்.மேலும் கர்ப்பகால பிரசர் நோய் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். ஏற்கனவே சொன்னது போல இந்த நோய் கருப்பையின் உள்ளேயே குழந்தையின் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம்.அத்தோடு அதிக இரத்தம் வெளியேறுவது காரணமாக தாயின் உயிருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். இதற்கு மருத்துவ முறை குழந்தை உயிரோடு இருக்கும் பட்சத்தில் உடனடியாக பிறப்புத் தூண்டப்பட வேண்டும். சில வேளைகளில் சிசேரியன் செய்ய வேண்டி வரலாம்.

ஆகவே கர்ப்பம் தரித்து .. ஐந்து மாத காலத்திற்குப் பின் உங்களுக்குத் தொடர்ச்சியான வயிற்று வலி ஏற்பட்டால் எந்தவைதமான உணவுகளையும் வாய் வழியே உட்கொள்ளாமல் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று உங்களுக்கு இந்த நோய் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
cb663ac7 75fc 4ccd 931a

Related posts

ஒரு சிலர் மாதவிடாய் நாட்களின்போது துடிதுடித்துப்போவார்கள். ஏன் அப்படி நடக்கிறது, அதை எவ்வாறு தவிர்ப்பது

nathan

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு..! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

nathan

பெண்கள் கர்ப்பம் தரிக்காததற்கு முக்கியக் காரணங்கள்!…

sangika

குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன தெரியுமா?…

sangika

சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தைகளை தாய்ப்பால் குடிப்பதில் இருந்து நிறுத்திவிடலாம்.

nathan

நடுத்தர வயது பெண்களை தாக்கும் கருப்பை கட்டியின் அறிகுறியும், சிகிச்சையும்

nathan

நாப்கின் எப்படி தயாரிக்கப்படுகிறது? விளம்பரங்களை பார்த்து ஏமாறாதீங்க..

sangika

தாய்ப்பாலைத் தவிர, வேறு பால் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்கள்

nathan

குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி?

nathan