28.5 C
Chennai
Sunday, Nov 24, 2024
தலைமுடி சிகிச்சை

நீளமாக கூந்தல் வளர…

நீளமான கூந்தல் மீது பலருக்கும் ஆசைதான். ஆனால், அதற்குக் சீரான கேசப் பராமரிப்பும், ஊட்டச்சத்து உணவுகளும் மிக அவசியம். கூந்த வளர்ச்சிக்கு உதவக்கூடிய அடிப்படை பராமரிப்பு வழிகளை இங்கு பார்க்கலாம்.

தலைமுடி நன்றாக வளர வேண்டும் என்றால், அதற்கு அதைச் சரியான நேரத்தில் ட்ரிம் செய்வதும் அவசியம். கூந்தல் வளர்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அது ஆரோக்கியமாக இருப்பதும் முக்கியம்.

அதனால் சீரிய இடைவெளியில், குறைந்தபட்சம் மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது, கூந்தலின் நுனிப்பகுதியில் கிளை பிரிந்திருக்கும் பலவீனமான பாகத்தை (Split Ends) வெட்டிவிடுவது நல்லது. இப்படிச் செய்வதன் மூலம், அந்த ஸ்பிளிட் எண்ட்ஸ் மேல்நோக்கிப் பரவுவதைத் தடுக்கலாம்.

கூந்தலை அடிக்கடி அலசுவது நல்லது. தலையில் அழுக்கு, பிசுபிசுப்பு சேர்ந்தால் கூந்தலின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் பாதிக்கப்படும். வெளியில் சென்று வந்தாலோ, அழுக்காக இருப்பதாய் உணர்ந்தாலோ உடனடியாகத் தலையை அலசவும்.

மென்மையான ஷாம்பூகளைப் பயன்படுத்துவதும், கண்டிஷனர்கள் உபயோகிப்பதும் மிக நல்லது. நல்ல தரமான கூந்தல் பிரஷ்களைப் பயன்படுத்துவது கூந்தல் பராமரிப்பில் மிக முக்கியப் பகுதியாகும். கூந்தலின் ஆரம்பப் பகுதியில் ஆரம்பித்து நுனிப் பகுதி வரை மென்மையான பிரெஷ்களைக் கொண்டு சீவ வேண்டும்.

மேலும், ரத்த ஓட்டத்தை தூண்டும் வகையில் ஸ்கால்ப்பில் சீப்பைக் கொண்டு மிருதுவாக சீவுவதை வழக்கமாக்கவும். முடிந்தவரை கூந்தலை சிக்கு விழாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இதனால் கூந்தல் பாதிப்படையாமல் தடுக்கப்படும்.

வழக்கமாக கூந்தலுக்கு செய்யும் ஷாம்பூ, எண்ணெய் மற்றும் கண்டிஷனர் பராமரிப்புடன் கூடுதலாக சில விஷயங்களைச் செய்வது கூந்தலின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் உதவும்.

4 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதை உச்சந்தலையில் மசாஜ் செய்து, பின் கூந்தலின் நுனி வரை தடவவும். 30 நிமிடங்கள் ஊறவிட்டு குளிக்கவும்.

இதில் வைட்டமின் ஈ அதிகமாக இருப்பதால் கூந்தல் மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும். மேலும், கூந்தல் பலம் ஆகும்; உதிர்வதும் குறையும். இதை வாரத்துக்கு ஒரு முறையாவது செய்து வரலாம்.-News & image Credit: maalaimalar

Related posts

வறண்ட கரடுமுரடான கூந்தலா? இதை ட்ரை பண்ணுங்க!!

nathan

பொடுகைப் போக்கும் பொக்கிஷம் கற்றாழை..! நம்ம வீட்டு மூலிகை

nathan

உங்க சமையலறையில் உள்ள ‘இந்த’ பொருட்கள் முடி உதிர்வை தடுத்து வேகமாக வளர வைக்க உதவுமாம்…!தெரிந்துகொள்வோமா?

nathan

நீளமான கூந்தலுக்கான அழகு குறிப்புகள்

nathan

25 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் முடி உதிர்கிறது தெரியுமா?

nathan

சோப்பு, ஷாம்பூ பயன்படுத்துபவரா? இதோ உடலுக்குள் உட்புகும் ரசாயனம்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த எண்ணெய், ஒரே மாதத்தில் தலைமுடி உதிர்வதை நிறுத்தும் தெரியுமா?

nathan

தீவிரமான பொடுகு தொல்லையா? வெங்காயச் சாறை உபயோகப்படுத்தும் வழிகள்!!

nathan

சூப்பர் டிப்ஸ்.. அடர்த்தியான முடி வேண்டுமா? அப்ப இந்த பூவில் எண்ணெய் செஞ்சு தினமும் யூஸ் பண்ணுங்க…

nathan