dermatofibroma removal scar pictures
மருத்துவ குறிப்பு

சிசேரியன் தழும்பை இயற்கையா மறைய

கர்ப்பமாக இருந்தபோது பெரிதான வயிறு பிரசவத்திற்குப் பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். நார்மல் டெலிவரியோ, சிசேரியனோ வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. இந்த தழும்புகள் சில சமயங்களில் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். வீட்டில் இருக்கக் கூடிய இயற்கையான பொருட்களை வைத்து பிரசவ தழும்புகளை மறையச் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையானது தழும்புகளை மறைய வைக்கும் முக்கியமான பொருளாகும். எலுமிச்சையை சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்து வைத்துக் கொண்டு சிசேரியன் செய்த காயத்தழும்பின் மீது தேய்க்கவும். 6 மாதங்கள் வரை தொடர்ந்து இவ்வாறு செய்து வர தழும்புகள் மறைந்து விடும். எலுமிச்சை சாறு காய்ந்த உடன் 5 நிமிடத்திற்குள் குளிர்ச்சியான தண்ணீரை விட்டு கழுவிவிடுங்கள். வறண்ட சருமத்தினர் எலுமிச்சையை தவிர்க்கவும்.

தக்காளி பேஸ்ட்

தக்காளியை தோல் உறித்து அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். அந்த பேஸ்ட்டை எடுத்து சிசேரியன் தழும்பு உள்ள பகுதிகளில் அப்ளை செய்யவும். இரவு நேரத்தில் தக்காளி சாஸ் அப்ளை செய்து விட்டு காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இந்த தக்காளி சாஸ் தடவி வர பலன் தெரியும்.

சோற்றுக் கற்றாழை

சோற்றுக்கற்றாழை மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும். சோற்றுக்கற்றாழையை நன்றாக உரித்து அதன் ஜெல்லினை எடுத்து காய தழும்புள்ள இடத்தில் தடவலாம். இரவில் தடவி வைத்திருந்து பகலில் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவிவிட்டு நன்றாக துடைத்து விடவும். அதன் பின்னர் பேபி லோசனை அந்த இடத்தில் அப்ளை செய்யலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இவ்வாறு செய்து வர தழும்புகள் மறையும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து சிசேரியன் தழும்பு உள்ள இடத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து காய்ந்த உடன் அதன் மேல் வெதுவெதுப்பான நீரை ஊற்றி கழுவவும். இது சில மாதங்களிலே காயத்தழும்பை மறையச் செய்து விடும்

dermatofibroma removal scar pictures

Related posts

பெண்கள் விவாகரத்து செய்ய கூறும் காரணங்கள்

nathan

திருமணத்திற்கு பிறகு பெண்கள் அதிகமாக செய்யும் தவறுகள்

nathan

இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் கோபம்

nathan

உங்க தொடை மற்றும் பின் பக்க தசையை குறைக்க இத ட்ரை பண்ணுங்க!

nathan

42 கிராம் பாதாம் தொப்பையில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்

nathan

மாதவிடாய் நாட்களில் மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்???

nathan

கொழுப்பை கரைக்கும் – இதய நோயாளிகளுக்கு அற்புத உணவான பார்லி

nathan

உங்களுக்கு அடிக்கடி தலைவலி மண்டைய பொளக்குதா?… இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

மறந்து போன எண்ணெய்க்குளியல்

nathan