30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
sss2 e1453130758377
எடை குறைய

குண்டு உடலை ஒல்லியாக்கும் நறுமணத்தயிர்

உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பிரச்சினை உடல் பருமன். கண்ட நேரத்தில் சாப்பிடுவது. நொறுக்குத் தீனிகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் என சாப்பிடுவதால் உடல் பருமனாகிறது. இதனால் இதயநோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில் யோகர்ட் சாப்பிடுவதன் மூலம் உடல் பருமன் குறையும் என்று தெரியவந்துள்ளது. யோகர்ட் என்பது கொழுப்பு நீக்கப்பட்டு நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்ட தயிர். இதில் உடல் பருமனை குறைக்கும் பாக்டீரியாக்கள் உள்ளனவாம். பொதுவாக தயிரில் புரதச் சத்து, கால்சியம், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஆகியவை காணப்படுகின்றன.

மாரடைப்பை தடுக்கும்:
தயிர் எளிதாக செரிக்கக் கூடிய உணவாகும். தையாமின் உயிர்ச்சத்து தயிரில் அதிகமாக உள்ளது. கல்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களை தயிர் அதிகமாக வழங்குவது மட்டுமின்றி, குடல்களிலிருந்து இரத்தத்தில் உணவை கிரகிக்கவும் உதவுகிறது. இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய் களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. நறுமணத் தயிரிலுள்ள நுண்ணுயிர்கள் அபாயகரமான நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வாய்ந் தவை. இதனால் வயிற்றுப் போக்கு மலச்சிக்கல் போன்றவைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். இரத்தத்தில் கொழுப்பு உயர்வதையும், அதனால் ஏற்படும் மாரடைப் பையும் தடுக்கின்றது.

உடல் பருமன் குறையும்:
அமெரிக்காவின் மிசௌரியில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் உடல் பருமன் குறித்தும் அதை குறைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நொறுக்குத் தீனி அதிக அளவில் சாப்பிடுவதால், உடல் பருமனை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உருவாவது நிரூபிக்கப்பட்டது. உடல் பருமனுக்கு காரணமாக இந்த பாக்டீரிக்களை கொல்லும் சக்தி, யோகர்ட்டில் உள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, உடல் பருமனை தவிர்க்க விரும்புகிறவர்கள் தினமும் யோகர்ட் சாப்பிடலாம் என்று ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உடல் பருமன் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வு உடல் பருமனைக் கட்டுப்படுத்த உதவும் என ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உடல் பருமன் நிபுணர் ஜெப்ரே பிளையர் கூறியுள்ளார். உடல் பருமன் கட்டுப்படுத்தப்பட்டாலே இதயநோய்கள், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் எட்டிப்பார்க்காது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

sss2 e1453130758377

Related posts

நீங்க வேகமாக எடையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க…

nathan

உடல் எடை அதிகரிக்க ஓமோன்கள் காரணமா?

nathan

உங்களுக்கு எட்டே வாரங்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா?

nathan

சின்ன சின்ன மருத்துவ நடைமுறைகளையும் கடைபிடித்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்!…

sangika

வயிற்று பகுதியை வலுவடையச்செய்யும் சேர் பயிற்சி

nathan

கொழுப்பை குறைக்கும் கொள்ளு துவையல்

nathan

உடல் எடையை குறைக்க நினைக்கும்போது பொதுவாக செய்யும் தவறுகள்

nathan

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

nathan

மூன்றே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப இந்த மெனுவை ஃபாலோ பண்ணுங்க.

nathan