25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 631cb079264d0
சமையல் குறிப்புகள்

தெருவே மணக்கும் இறால் பெப்பர் ப்ரை…

தேவையான பொருட்கள்
சுத்தமாக கழுவிய இறால் 250 கிராம்

4 பச்சை மிளகாய்

25 கிராம் இஞ்சி

25 கிராம் பூண்டு

ஒரு வெங்காயம்

சிறிது கருவேப்பிலை

ஒரு ஸ்பூன் மிளகு தூள்

ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

 

செய்முறை
முன்னதாக இறாலை நன்கு கழுவி சுத்தமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள இறாலை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் இட்டு ஓரளவுக்கு அரைத்து எடுத்து, அதனை தனியாக வேறொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின், ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி விட வேண்டும்.

தெருவே மணக்கும் இறால் பெப்பர் ப்ரை… 10 நிமிடத்தில் ஈஸியா செய்யலாம் | Prawn Pepper Fry How To Cook

பிறகு, அதில் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதோடு, ஊற வைத்துள்ள இறாலை சேர்க்க வேண்டும்.

வேண்டுமானால் தேவையான அளவு உப்பு லேசாக தூவி, பொன்னிறமாகும் வரை 2-3 நிமிடங்கள் நன்கு பிரட்டி விட வேண்டும். பின்னர், கொஞ்சம் ஆறவிட்டு எடுத்து பரிமாரினால் ருசியான இறால பெப்பர் ஃப்ரை ரெடி!

இந்த இறால் பெப்பர் ஃப்ரையை, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையான சுவையாக இருக்கும்.

Related posts

சுவையான சாஃப்ட் சப்பாத்தி

nathan

சுவையான கேரளா ஸ்டைல் வெஜ் சொதி

nathan

இனியெல்லாம் ருசியே! – 4

nathan

மட்டன் கொத்துக்கறி ரெசிபி

nathan

சுவையான எள்ளு பன்னீர் மஞ்சூரியன்

nathan

இடியாத்துடன் சிக்கன் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்….

sangika

சுவையான பிரெட் பிரியாணி – செய்வது எப்படி?

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன்

nathan

காலிஃப்ளவர் குருமா!

nathan