சுத்தம் செய்த மீன் & அரைக்கிலோ மிளகாள்தூள் & மூன்று தேக்கரண்டி தனியாத்தூள் & ஒரு தேக்கரண்டி தேங்காய் & அரை மூடி சின்ன வெங்காயம் & இருபது சீரகம் & அரைத் தேக்கரண்டி கடுகு & அரைத் தேக்கரண்டி கறிவேப்பிலை & ஒரு கொத்து எண்ணெய் & நான்கு தேக்கரண்டி புளி & ஒரு பெரிய எலுமிச்சைம்பழம் அளவு உப்பு, மஞ்சள் & தேவையான அளவு
தேங்காயைத் தனியே நன்றாக அரைக்கவும். சின்ன வெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைக்கவும். சின்ன வெங்காயத்தில் நான்கை மட்டும் தனியே வட்ட வட்டமாக அரைக்கவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெங்காயம், கருவேப்பிலையை போடவும். வெங்காயம் சிவந்து வந்ததும் புளி கரைத்த நீரை ஊற்றி உப்பு, மசாலா ( தனியா, மிளகாய்) தூள்களைச் சேர்க்கவும். தேங்காய், அரைத்த வெங்காயம், சீரகத்தையும் «ச்£க்கவும். மீன் துண்டுகளைப் போட்டு மூடி வேகவிடவும். குழம்பு கெட்டியாகி எண்ணெய் மிதந்ததும் இறக்கவும்.
பொதுவாக இந்த மீன் குழம்புகளுக்கு தேங்காய், மிளகாய், புளி மூன்றையும் சரிவிகிதத்தில் சேர்த்தால் சற்று காரசாரமாக இருக்கும். பெரிய வெங்காயத்தைவிட சின்ன வெங்காயம் மீனுடன் பொருந்தும். பெரிய வெங்காயம் போடுவதானால் எண்ணெயில் வதக்கி அரைத்து போடவும். மத்தி, வாளை போன்ற மீன்களை குழம்பு செய்கையில் இரண்டு பூண்டு அரைத்து போட்டு தாளிக்கும் போது அரைத்தேக்கரண்டி வெந்தயமும் போட வேண்டும். அநேகமாக எல்லாவிதக் கடல், ஆற்று மீன்களையும் இந்த மாதிரிக் குழம்பு செய்யலாம். மீன் குழம்பை அதிகம் கிண்டி விடலாகாது. மீன் கரைந்து குழம்பெல்லாம் முள்ளாகிவிடும். சாதாரணக் காரக் குழம்பு மசாலாத் தூளையே (பருப்பு போடாதது) மீன் குழம்புக்கும் பயன்படுத்தலாம். நன்றாகவே இருக்கும். காரக்குழம்பில் காய்க்குப் பதிலாக மீனைப் போட்டு செய்வதே சாதாரண மீன் குழம்பு ஆகும்.