23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
581923 177445069285223 5906947738867505234 n
பெண்கள் மருத்துவம்

கருத்தரிப்பதை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள்

குழந்தைகளை விரும்பாதார் இவ்வுலகில் உண்டோ? திருமணம் ஆன உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தம்பதிகளின் பெற்றோர் விரும்புவர். இரண்டு ஆண்டுகள் சச்தோஷமாக இருந்துவிட்டு பின் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று இப்போதுள்ள இளைய தலைமுறையினர் விரும்புகிறார்கள்.

ஆனால் குழந்தைப்பேறு என்பது நாம் எண்ணிய வண்ணம் நடக்காது. உடல், மனம், சூழல், ஆரோக்கியம், தாது, கரு, கருமுட்டை, எனப் பல்வேறு காரணிகள் கருத்தரிப்பதற்குத் துணை செய்ய வேண்டும். மேலும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், பலர் கருத்தரிக்க முடியாமல் இருக்கின்றனர். ஏனெனில் இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள், வலிமை குறைந்து, மன அழுத்தம் அதிகரித்து, நல்ல இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவாறு இருக்கின்றன.
எனவே, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், கீழே குறித்துள்ள ஆலோசனைகளை பின்பற்றி வந்தால், அவை கருவுறும் திறனை மேம்படுத்தும்.

குளிர்ச்சியான சூழல்
ஆண்களின் விந்தணுக்கள், குளிர்ச்சியான சூழலில் நன்கு உற்பத்தியாகின்றன. மடியிலேயே கணிப்பொறியை வைத்துக் கொண்டு பணிபுரியும் ஆண்களுக்கு, விந்துக்களின் உற்பத்தி மற்றும் கருத்தரிக்கும் திறன் குறைவாக இருக்கும். மேலும் ஆண்கள் நீண்ட நேரம், வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெந்நீரில் குளித்தவர்கள், குளிர்ந்த நீரில் குளிக்கத் தொடங்கியதால், ஆண்களின் விந்தணு உற்பத்தி ஐந்து மடங்காகப் பெருகியதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், உடலை இறுக்கிப் பிடிக்கும், கால் சட்டைகளைத் தவிர்த்து, தொளதொளவென்றிருக்கும், பாக்ஸர் கால் சட்டைகளை அணிய வேண்டும்.

சூரிய வெளிச்சத்தில் குளிக்கவும்
சூரிய வெளிச்சமானது, வைட்டமின் டி-யை உற்பத்தி செய்யவும், கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இது ஆண், பெண் என இருபாலாருக்குமே தான். மேலும் பெண்களுக்கான பாலின ஹார்மோன்களான மாத விலக்கை நெறிப்படுத்தும், புரோஜெஸ்டிரோன் மற்றும் கருவுறும் திறனைக் கட்டுப்படுத்தும் ஈஸ்டிரோஜென் ஆகியவற்றின் அளவை அதிகரிக்க வைட்டமின் டி உதவுகிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக வைட்டமின் டி-யானது, ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கவும்
பதட்டமும், மன அழுத்தமும், பெண்களின் கருவுறும் தன்மையை வெகுவாகப் பாதிப்பதோடு, ஆண்களின் உயிரணு உற்பத்தி வீதத்தையும் மட்டுப்படுத்துகின்றன. மேலும், பாலியல் இச்சையையும் குறைக்கின்றன.

பால் பொருட்களை சாப்பிடவும்
முழுக் கொழுப்புள்ள பாலை, பெண்கள் தினமும் பருகி வந்தால், மலட்டுத்தன்மையானது 25% க்கு மேல் குறைந்ததாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண்களின் கருமுட்டைப்பைகள் நன்கு வேலை செய்ய, இந்த பால் கொழுப்புக்கள் உதவுகின்றன.

மல்டி வைட்டமின் மாத்திரைகள்
கருவுறுதலுக்குத் தேவையான ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 மற்றும் செலினியம் ஆகியவை அடங்கிய மல்டி வைட்டமின் மருந்து மாத்திரைகளை தினமும் உட்கொள்வதால், கருவுறும் திறன் இரண்டு மடங்கு அதிகமாகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புகைப்பிடிப்பதை நிறுத்தவும்
புகைப்பிடிக்கும் ஆண்கள் மலட்டுத்தன்மை அடைய 50% வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்களது உயிரணு எண்ணிக்கையும் மிகக்குறைவாகவே இருக்கும். புகைப்பிடிக்கும் பெண்கள் புகைப்பிடிக்காத பெண்களை விட 30% குறைவாகவே கருத்தரிக்கும் விகிதத்தைப் பெறுகின்றனர். ஏனெனில் புகைப்பது, கருப்பையில் சிசு தங்குவதைத் தடுக்கிறது.

மது அருந்தும் முன் யோசிக்கவும்
குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், அருந்தும் மதுவின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது. அதிக அளவு மது அருந்துவது கருமுட்டை உற்பத்தியையும், விந்தணு உற்பத்தியையும் வெகுவாகப் பாதிக்கின்றது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மென்பொருட்கள்
தற்போது நிறைய மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில், மாதவிலக்கு நாட்காட்டி, கருத்தரிக்க வழிகாட்டி, (Period Diary, Fertility Friend, Menstrual Calendar) போன்றவை உடல் வெப்பம், பருவ சுழற்சி ஆகியவற்றைக் கொண்டு கணக்கிட்டு, எந்தத் தேதியில், தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவிக்கும். ஆகவே இதுபோன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி, உறவில் ஈடுபடுவது நல்லது.

அக்குபஞ்சர் முறைகள்
உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் அக்குபஞ்சர் முறைகளைப் பயன்படுத்துங்கள். அது முட்டை உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதாகவும், கருப்பைக்கு போகும் இரத்தத்தின் அளவை அதிகரிப்பதாகவும், நம்பப்படுகிறது. அதனால், கருத்தரித்த முட்டைகள், கருப்பையில் சென்று தங்கும், வாய்ப்பை அதிகரிப்பதாகவும் நம்பப்படுகிறது.

தாம்பத்திய உறவு
வாரத்தில் ஒரு முறை தாம்பத்திய உறவு கொள்ளும் தம்பதியருக்கு கருவுறும் வாய்ப்பு 15% அதிகரிப்பதாகவும், அதுவே வாரத்திற்கு மூன்றிலிருந்து நான்கு முறை தாம்பத்திய உறவு கொள்ளும் தம்பதியர்க்கு கருவுறும் வாய்ப்பு 50 % அதிகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. தாம்பத்திய உறவானது ஆண் உயிரணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் ஆண்களின் உயிரணுக்களானது மூன்று நாட்களுக்கு மேல் உடலிலேயே தங்கியிருந்தால், அதன் தரம் குறைகிறதாம்.

ஓவுலேசன் கால்குலேட்டர்
பெண்களது மாதவிலக்கு சுழற்சியின் அடிப்படையில், குழந்தை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ள நாள்களைக் கணக்கிட்டு அறிந்து கொள்ளுங்கள். சராசரியாக 28 நாள்கள் மாதவிலக்கு சுழற்சி உள்ள பெண்களுக்கு, 10 ஆம் நாள் முதல் 17 ஆம் நாள் வரையான காலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள நாள்களாகும். இத்தகைய நாட்களின் கணக்கீட்டை ஓவுலேசன் கால்குலேட்டர் மூலம் தெரிந்து கொண்டு, பின் அதற்கேற்றாற் போல் உறவில் ஈடுபட்டால், விரைவில் கருத்தரிக்கலாம்.
எடையைக் குறைக்கவும்

உடல் கொழுப்பானது ஈஸ்டிரோஜென் எனப்படும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது கருமுட்டை உற்பத்தி முறையை குழப்பிவிடும். குறைந்த எடை உடைய பெண்களை விட அதிக எடையுள்ள பெண்கள் சீரற்ற மாதவிலக்கு சுழற்சியைக் கொண்டிருப்பார்கள். எனவே எடையை 5% குறைத்தால், அது கருவுறும் திறனை 20% அதிகரிக்கும்.

மிகவும் ஒல்லியாக இருக்க வேண்டாம்
எடையைக் குறைக்க வேண்டும் என்று பட்டினி கிடந்து ஒல்லியாக ஆகி விடக்கூடாது. மேலும் ஒல்லியாக இருக்கும் பெண்கள் நன்கு சாப்பிட்டு கொஞ்சம் சதைப்பற்றுடன் இருக்க முயல வேண்டும். ஏனெனில், கருவுறுதலுக்கும் கருவுற்ற பின், சிசுவைப் பாதுகாக்கவும் கொழுப்பு தேவை. அத்தகைய கொழுப்பு தேவையை விடக் குறைவான அளவு இருக்குமேயானால், அது கருவுறும் வாய்ப்பை அடைத்துவிடும்.

கார்போஹைட்ரேட் உணவுகளை குறைக்கவும்
அதிக அளவு கார்போஹைட்ரேட் கொண்டுள்ள உணவுப் பொருட்களான வெள்ளை ரொட்டி, பாஸ்தா, பிஸ்கட்டுகள் ஆகியவை கருத்தரித்தலைப் பாதிக்கின்றன என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர். இவ்வுணவுப் பொருட்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டி, அதன் காரணமாக இன்சுலின் தேவையை அதிகரிக்கச் செய்துவிடுகின்றன. அதிகமான இன்சுலின் கருவுறுதலைப் பாதிக்கலாம்.

போதை மருந்துகளைத் தவிர்க்கவும்
கொக்கைன், மரிஜுவானா போன்ற போதை மருந்துகள் ஆண்களுக்கு உயிரணு எண்ணிக்கையைக் குறைக்கின்றன. இயல்பு மீறிய உயிரணுக்களை உற்பத்தி செய்கின்றன. பெண்களுக்கு கருமுட்டைப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

மீன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்
எண்ணெய் நிறைந்த மீனான சால்மன் மற்றும் ஆளிவிதையில் காணப்படும், ஒமேகா 3s கொழுப்பானது, கருச்சிதைவிற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும், ஆண்களுக்கான உயிரணுவின் தரத்தை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான ஹார்மோன் செயல்பாட்டிற்கு, இக்கொழுப்பு மிகவும் இன்றியமையாதது. ஆனால் நம்மில் பலர் இதைப் போதிய அளவு எடுத்துக் கொள்வதில்லை.

காபியைக் குறைக்கவும்
ஒருநாளைக்கு ஒரே ஒரு காபி அருந்துவது கருவுறும் திறனைப் பாதியாகக் குறைத்துவிடுகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுகின்றன. காபியிலுள்ள காஃப்பைன், சினைப்பைகளிலிருந்து கருப்பைக்கு கருமுட்டைகளை எடுத்துச் செல்லும் வழியான ஃபெலோப்பியன் குழாய்த் தசைகளின் செயல்பாட்டைக் குறைப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வலி நிவாரணி மருந்துகளைக் குறைக்கவும்
கருமுட்டை உற்பத்தியாகும் தருணங்களில், மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும் பாராசிட்டமல், ஆஸ்பிரின் போன்றவற்றினை வாங்கி உட்கொள்ளுதல், கருவுறுதலைப் பாதிக்கும். ஏனெனில் அது ஃபெலோப்பியன் குழாய்களிலிருந்து கருமுட்டைகளை விடுவிக்க உதவும் ஹார்மோனான, ப்ரோஸ்டாகிளாண்டினை மட்டுப்படுத்திவிடும்.

அதிகம் தண்ணீர் குடிக்கவும்
உடலின் முக்கிய பாகங்களுக்குத் தேவையான தண்ணீர் செல்கிறதா என்று உடல் கவனிக்கும். எனவே பெண்கள் தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், இனப்பெருக்க மண்டலம் தனது பணியை சரிவர செய்யாமல் இருந்துவிடும். மேலும் கருமுட்டைக்கும், கருப்பையைச் சுற்றிலும், அதிக அளவு இரத்த ஓட்டத்தை தண்ணீர் தான் உருவாக்கும். ஆனால் உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லையெனில், ஆண் உயிரணுக்கள் மிதந்து சென்று கருமுட்டையை அடைய பயணிக்க உதவும், செர்விக் திரவம், செயலற்றதாகிவிடும்.

வீட்டு வேலைகளைச் செய்யவும்
வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் அல்லது சிறு சிறு உடற்பயிற்சிகள் ஆகியவற்றைச் செய்து கொண்டேயிருக்கும் பெண்கள், ஒரு உடல் உழைப்பும் இல்லாத பெண்களை விட, IVF மூலம் கருத்தரிப்பதற்கு, மூன்று மடங்கு அதிக வாய்ப்புள்ளவர்கள் என்று புதிய ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளன. ஏனெனில், உடற்பயிற்சியின் விளைவாக அதிகமான இன்சுலின் சுரப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. அதிகமான இன்சுலின் சுரப்பது ஆரோக்கியமான கருமுட்டைகள் உருவாவதற்குக் கேடுவிளைவிக்கும் என்று நம்பப்படுகிறது.
581923 177445069285223 5906947738867505234 n

Related posts

முப்பது பிளஸ்சில் முக்கியம்!

nathan

முறையற்ற கர்ப்பத்திற்கு பின்னால் எடுக்கப்படும் சில பிரச்சினைக்குரிய நடவடிக்கை!…

sangika

தாய்ப்பாலைத் தவிர, வேறு பால் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்கள்

nathan

ஒரு சிலர் மாதவிடாய் நாட்களின்போது துடிதுடித்துப்போவார்கள். ஏன் அப்படி நடக்கிறது, அதை எவ்வாறு தவிர்ப்பது

nathan

பெண்கள் இதை தினமும் சாப்பிட்டால் மாதவிடாய் பிரச்னைகள் தீரும்

nathan

தாய்ப்பால் சுரக்கவைக்கும் சுரைக்காயின் மகத்துவம்

nathan

பிள்ளைபேற்றை தள்ளிப்போடாதீர்கள்

nathan

மாதவிலக்கு பிரச்னையை போக்கும் வாழைப்பூ

nathan

பெண்களே நீங்கள் அதிகம் கோபப்படுபவரா? அப்ப இத படிங்க!…

sangika