35.9 C
Chennai
Wednesday, Jul 16, 2025
21 1453351488 1 onionjuice
மருத்துவ குறிப்பு

வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பதற்கான சில கிராமத்து வைத்தியங்கள்!

வெங்காய சாறு
வெங்காய சாறு வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க வல்ல ஓர் சிறப்பான பொருள். அதற்கு வெங்காய சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகள் அழித்து வெளியேறிவிடும்.

மாதுளை தோல்
மாதுளையின் தோலை உலர வைத்து, அரைத்து பொடி செய்து, அதில் சிறிது தேன் கலந்து உட்கொண்டு வர, வயிற்றில் உள்ள புழுக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, அவை அழிந்து வெளியேறும்.

பூண்டு
பூண்டில் உள்ள மருத்துவ குணத்தால், அதனைக் கொண்டு எப்பேற்பட்ட பிரச்சனையையும் சரிசெய்யலாம். அதற்கு தினமும் பச்சை பூண்டை 3-4 உட்கொண்டு வர வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.

பாகற்காய்
பாகற்காயை சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளர் மோரில் 1 டேபிள் ஸ்பூன் பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து, அவ்வப்போது குடித்து வர, வயிற்றில் புழுக்கள் வளர்வதைத் தடுக்கலாம்.

எலுமிச்சை விதைகள்
எலுமிச்சையின் விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை குடித்து வர, குடல் புழுக்களை முற்றிலும் வெளியேற்றி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

ரைஸ் வினிகர்
1 டேபிள் ஸ்பூன் அசிட்டிக் ரைஸ் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, குடிப்பதன் மூலமும் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதிலும் இச்செயலை ஒரு நாளில் 3-4 டம்ளர் என வாரம் ஒருமுறை குடித்து வர, வயிறு சுத்தமாக புழுக்களின்றி இருக்கும்.

கிராம்பு
தினமும் 1-2 கிராம்பை உட்கொண்டு வர, அதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மையினால், புழுக்கள் வெளியேறிவிடும். முக்கியமாக கிராம்பு வளர்ந்த ஒட்டுண்ணிகளை அழிப்பது மட்டுமின்றி, அதன் முட்டைகளையும் முற்றிலும் அழித்து வெளியேற்றிவிடும்.
21 1453351488 1 onionjuice

Related posts

தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு கீரை மட்டும் போதும்!…

sangika

ஆழ்மனத்தின் குறைகளை சரி செய்து மனோவியாதிகளை போக்கும் ஹிப்னோ தெரபி முறை

nathan

சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகலையா? கவலைய விடுங்க

nathan

யாருக்கெல்லாம் மார்பக புற்றுநோய் அதிகம் தாக்க சந்தர்ப்பங்கள் இருக்கிறது?

nathan

உங்களுக்கு இவையெல்லாம் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் எனத் தெரியுமா?

nathan

உங்களுக்கு சீதாப்பழத்தின் நன்மைகள் எவ்வளவு என்று தெரியுமா?

nathan

மலச்சிக்கல் தீர்க்கும் கடுக்காய்ப் பொடி

nathan

லேப்டாப் கேமராவை மூடி வைக்க மறந்தால் என்ன ஆகும் தெரியுமா?

nathan

புண், கட்டியை குணமாக்கும் ஈழத்தலரி

nathan