28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
Prawns and Couscous with Yoghurt
அசைவ வகைகள்

நிமிடத்தில் தயாரிக்கும் இறால் மற்றும் குஸ்குஸ் உடன் தயிர் மற்றும் ஹம்மஸ் சாஸ்:

இதற்கு உங்களுக்கு என்னென்ன‌ தேவை:
குஸ்குஸ் – 200 கிராம்
ஹம்மஸ் 1 தேக்கரண்டி கடையில் வாங்கியது
கிரேக்க தயிர் 100 கிராம்
செர்ரி தக்காளி ஒரு கைப்பிடி அளவு (பாதியாக வெட்டிக் கொள்ளவும்)
ஆலிவ் எண்ணெய் 2 தேக்கரண்டி
உலர்ந்த மற்றும் நறுக்கப்பட்ட ஆப்ரிகாட் 60 கிராம்
உப்பு
நன்கு நறுக்கிய புதிய புதினா அல்லது வெந்தயம் 2 தேக்கரண்டி
இறால் 570 கிராம் நன்கு சுத்தம் செய்து பின்பகுதி உரிக்கப்பட்டது.
½ தேக்கரண்டி சிவப்பு மிளகாய்
ஒரு ½ எலுமிச்சை பழ சாறு

நீங்கள் இதை செய்வது எப்படி?
அதிக வெப்பத்தில் கிரில்லை சூடாக்கிக் கொள்ளவும்.
குஸ்குஸ், ஆப்ரிகாட் மற்றும் ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி இவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த கிண்ணத்தில் மிகவும் சூடான தண்ணீர் 260 மில்லி சேர்த்து இதை மூடி வைக்கவும், அப்படியே தனியாக இதை வைக்கவும்.
இதை 5 நிமிடம் வரை அப்படியே விட்டு விடவும், இப்போது குஸ்குஸ் சூடான தண்ணீரில் நன்கு வெந்து அந்த நீரை முழுவதும் உறிஞ்சி விடும்.
மற்றொரு கிண்ணத்தில் தயிர், புதினா, ஹம்மஸ் மற்றும் நீர் 2 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தனியே வைத்துக் கொள்ளவும்.
ஒரு பேக்கிங் தாள் எடுத்து அதன் மீது இறால்கள், சிவப்பு மிளகு, தக்காளி மற்றும் ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி இவற்றை பரப்பி வைக்கவும். இதை சுமார் 4 நிமிடங்கள் வரை இறால் நன்கு வேகும் வரை வேக வைக்கவும்
Prawns and Couscous with Yoghurt
பின்னர், எலுமிச்சை சாறை இதன் மீது தெளிக்கவும்.
போர்க் உதவியுடன் குஸ்குஸ் – யை கிளறி விடவும். 4 தட்டுகளில் வேக வைத்த‌ இறால்களை பிரித்து வைத்து கொள்ளவும், இதனுடன் குஸ்குஸ்-யும் கலந்து கொள்ளவும்.
இறால் குஸ்குஸ் உடன் சாஸ் சேர்த்து சூடாக‌ பரிமாறவும்!

Related posts

கோழி மிளகு வறுவல் செட்டிநாடு

nathan

சுவையான நீலகிரி சிக்கன் குருமா

nathan

மீன் வறுவல்

nathan

சூப்பரான சைடு டிஷ் புதினா இறால் மசாலா

nathan

சிக்கன் பாப்கார்ன்

nathan

மொச்சை நெத்திலி மீன் குழம்பு

nathan

இறால் பஜ்ஜி

nathan

சுவையான முட்டை பட்டர் மசாலா

nathan

மசாலா ஆம்லெட்

nathan