23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
bbb
பெண்கள் மருத்துவம்

பெண்கள் அறிய வேண்டிய அழகின் இரகசியங்கள்

அழகுக்கு ஆசைப்படா மனிதர்களே கிடையாது. அதிலும் பெண்கள் என்றால் சொல்லத்தேவையே இல்லை.

அழகான பெண்களைக் கண்டால் ஆண்களைவிட பெண்களே அவர்கள் அழகில் லயித்துப்போய் விடுவார்கள்.

என்றாலும் தங்கள் அழகை தக்க வைத்துக் கொள்ள பெரும்பாலான பெண்கள் தவறிவிடுகின்றார்கள்.

எகிப்திய பேரரசியும் பேரழகியுமான கிளியோபட்றா, தன் அழகை மேன்மைப்படுத்த, தினமும் கழுதைப் பாலில் குளித்து வந்ததாக அறிய கிடைத்துள்ளது.

சிகிரியா மலைக்குன்றில் பெண்கள் விசேட மூலிகை குளியல் செய்வதற்காக அரசர் காசியப்பர் விசேட குளியல் தொட்டிகளை அமைத்து இருந்ததாக தகவல்கள் உள்ளன.

ஆகவே பெண்கள் இன்றைய நவீன யுகத்தில் தங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள எப்படியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் திருமதி பெரோஸா இது பற்றி அவர் எழுதியுள்ள தொடர்கட்டுரை இங்கு தரப்படுகின்றது.

கொழுப்பை கரைத்தல் :
பெரும்பாலான பெண்களில் தேவையற்ற கொழுப்பு உடம்பில் சேர்வதனால் அழகை இழப்பதோடு தினமும் அவதி வேறு படுகின்றார்கள்.

இந்தக் குறையை நீக்க முடியாதா என ஏங்குகிறார்கள். அவற்றுக்கான விடை ஆம் என்பதே.

அதன் வழிமுறை பின்வருமாறு. இடுப்பு, வயிறு, தொடை, கழுத்து, மார்பு, முதுகின் மடிப்பு, பின்புற ஆசனபகுதி என்பனவே கொழுப்பு அதிகமாகப் படியும் இடங்களாகும்.

எனவே எல்லாப் பகுதிகளின் கொழுப்பை நீக்குவது பற்றி எழுதுவதனால் கட்டுரை மிக நீண்டு விடும். பெண்கள் அழகை எடுப்பாய்க் காட்டும் மார்புப்பகுதியில் சேரும் கொழுப்பை எப்படி நீக்குவது என்பது பற்றிப் பார்ப்போம்.

மார்பகம், உயரம், நிறை, வயது, பருமன் போன்ற காரணங்களால் ஆளுக்காள் வேறுபட்டுக் காணப்படும். மேற்படி உயரம், நிறை, வயது, பருமன், ஏற்ப பெரிதாய் இருந்தாலும், பிரச்சினை. சிறிதாக இருந்தாலும் பிரச்சினை.

சிகிச்சை படிமுறை :
ஒயில் மசாஜ் செய்து (Slim oil massage treatment) இக்குறையை பூரணமாகக் குணப்படுத்தலாம்.

மசாஜ் செய்வதற்குத் தேவைப்படும் நேரம் 30–45 நிமிடங்கள்.

ஒயில் பூச பண்ணியதும் 5 நிமிடங்களில் தோல் ஒயிலை உள்ளே இழுத்துக்கொள்ளும். தோல் காய்ந்ததும், மறுபடி பூச பண்ணவேண்டும். இப்படி 2அல்லது 3 தடவை செய்யும் போது தோல், ஒயில் குடிப்பதை நிறுத்திக் கொள்ளும்.

இதற்காக விஷேடமாக தயாரிக்கப்பட்ட ஒயில் டின்கள் இந்தியாவில் விற்பனையாகின்றன. அவற்றைப் பயன்படுத்தினாலே பூரண பலனை அடைய முடியும்.

செய்முறை :
பெரிய மார்பை, நாம்வேண்டும் அளவுக்கு குறைப்பதானால் இரு கரங்களாலும் வெளிப்புறத்தில் இருந்து உட்புறமாக விரல்களால் வளைத்து அடிப்புறமிருந்து வெளிப்பக்கத்தில் இருந்து உட் பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும்.

சிறிய மார்பை பெரிதாக்குவதானால் உட்புறத்தில் இருந்து வெளிப்புறமாக மசாஜ் செய்யவேண்டும். மசாஜ் செய்யும் போது (Nipple) மார்பக காம்பில் ஒயில், விரல் படக்கூடாது.

ஒரு பக்க மார்புக்கு 5 நிமிடம் தேவை. அப்படி மாறி மாறி 30-45 நிமிடம் இரு மார்புகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மசாஜ் செய்யும் போது விரல்களால் 50 தடவை எண்ணிப்பார்த்து கணக்கிட்டு, அழுத்தி நீவி விடல் வேண்டும்.

இப்படிச் செய்யும் போது சிலசமயம் விரல் அழுத்தம் சில இடங்களில் கூடிக் குறைந்து இருந்தால் மார்பு சமச்சீர் இன்றி கூடிக் குறைந்து காணப்படும்.

அவற்றை குறைவுக்கு ஏற்ப சமப்படுத்தலை சீர் செய்ய வேண்டும்.

பூரண பலன் கிடைக்க வேண்டுமானால் 7 தடவை (Sitting) வருகையை உறுதிப்படுத்த வேண்டும். இரண்டு வருகைக்கு இடைப்பட்ட காலம் ஒரு கிழமையாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

இடைவெளியின்றி தொடர்ந்து சிகிச்சை செய்தாலே பூரண பலனை அடையலாம்.
bbb

Related posts

எப்படி பெண்கள் தடம் மாறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!

sangika

திருமணமாகப் போகும் பெண்களுக்கு மருத்துவர் ஆலோசனை அவசியமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களுக்கு தற்காலத்தில் அதிகமாக பாதிக்கும் நோய் தான் கற்பப்பை புற்று நோய்! அவதானமாக இருக்க இத படிங்க!..

sangika

முப்பதை தாண்டாதீங்க..

nathan

காரணங்களும்..தீர்வுகளும் இதோ..! மாதவிடாய் நாட்களில் இரவு அதிக வியர்வை வெளியேறுகிறதா..?

nathan

படியுங்க நுரையீரல்., ஆஸ்துமா பிரச்சனையை எளிதில் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்.!!

nathan

தங்கமும் அலர்ஜியை உருவாக்கும்

nathan

பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையானது எது?

nathan

மாதவிடாய் என்பதே ஒரு பெண் தன் வாழ்க்கையில் உடல் ரீதியாக சந்திக்கும் மிகப்பெரிய மாற்றமாகும்……

sangika