green gram kadaiyal 1630678338
சமையல் குறிப்புகள்

பச்சை பயறு கடையல்

தேவையான பொருட்கள்:

* பச்சை பயறு – 1/2 கப்

* சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)

சத்தான… ராகி பால் கொழுக்கட்டைசத்தான… ராகி பால் கொழுக்கட்டை

* நாட்டு தக்காளி – 1 (நறுக்கியது)

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

Dahi Bhindi Recipe : தஹி பிந்திDahi Bhindi Recipe : தஹி பிந்தி

* தண்ணீர் – 2 1/2 கப்

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பூண்டு – 2 பல்

* கறிவேப்பிலை – சிறிது

* மிளகு – 1/2 டீஸ்பூன்

மசாலா பொடிகள்…

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறைப் போட்டு குறைவான தீயில் குறைந்தது 3-5 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்து, நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மிளகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் கழுவி வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் நீரை ஊற்றி, குக்கரை மூடி குறைவான தீயில் 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

* விசில் போனதும், குக்கரைத் திறந்து, மத்து கொண்டு பச்சை பயறை நன்கு மசிக்க வேண்டும்.

* இறுதியாக அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பச்சை பயறு கடையல் தயார்.

Related posts

மஞ்சள் வெங்காய சட்னி

nathan

சுவையான பொங்கல் புளிக் குழம்பு

nathan

சுவையான பீட்ரூட் மசாலா தோசை

nathan

சுவையான முகலாய் முட்டை கிரேவி

nathan

சுவையான ரெடி மினி சமோசா வீட்டிலேயே செய்யலாம்…

sangika

சேனைக்கிழங்கு வறுவல்

nathan

சுவையான முட்டை சமோசா கோதுமை மாவில் செய்யலாம்….

nathan

மொறுமொறுப்பான ஸ்வீட் கார்ன் பக்கோடா

nathan

முந்திரி சிக்கன்

nathan