23.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
ld434
முகப் பராமரிப்பு

முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி…!!!

மஞ்சளை அரைத்துப்பூசினால் தான் அழகு கிடைக்கும் என்றில்லை.
மஞ்சள் கலந்த நீராவி கூட அழகைக் கூட்டும், தெரியுமா!!!

மூன்று கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள். பசும் மஞ்சள் கிழங்கு (அல்லது கஸ்தூரி மஞ்சள்) ஒன்றை அரைத்து அதன் சாறை எடுத்து, கொதி நீரோடு கலந்து ஆவி பிடியுங்கள்.

அடுத்து ஒரு கைப்பிடி அளவு துளசியைப் போட்டு ஆவி பிடிக்க வேண்டும்.
பிறகு 3 எலுமிச்சை இலை அல்லது அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து ஆவி பிடியுங்கள்.

இத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக செய்து முடித்ததும், கடைசியில் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேயுங்கள். (சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க ஐஸ் ஒத்தடம் அவசியம்) பின்னர், ஏதேனும் ஒரு ஃபேஸ் பேக்கை பூசி முகத்தை அலசுங்கள்.

அப்புறம் பாருங்கள்… `நானே நானா… மாறினேனா..!’ என்று உங்கள் விழிகள் விரியும். அந்தளவுக்கு துடைத்து வைத்த குத்து விளக்காக உங்கள் முகம் ஜொலிக்கும்.

சீசனில் தான் பசும் மஞ்சள் கிடைக்கும். இதனை காய வைத்தால், அது கஸ்தூரி மஞ்சள், பசும் மஞ்சள் கிடைக்காத சீசனில், மாற்றாக கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தலாம்.

கஸ்தூரி மஞ்சள் வகை மஞ்சள் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். துளசி நாள்பட்ட சொறி , படை சிரங்குகள் கூட மறைந்துவிடும்.

முகப்பரு,கரும்புள்ளி நீங்க,சிவப்பு அழகு பெற :

தேவையான பொருட்கள்:-செய்முறை :
1 – முல்தானி மட்டி பொடி – 200,கிராம்
2 – கஸ்தூரி மஞ்சள் பொடி – 50, கிராம்
3 – பூலாங்கிழங்கு பொடி – 50, கிராம்
4 -கோரைக் கிழங்கு பொடி – 50, கிராம்
5 -நன்னாரி வேர் பொடி -50, கிராம்,

இவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன வாங்கி ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.இதனை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து பால் சிறிது விட்டுக் குழப்பி முகத்தை நீரில் கழுவித் துடைத்து விட்டு முகத்திலும் கழுத்துப் பகுதிகளிலும் பூசி விட்டு அமர்ந்து அரை மணிநேரம் கழித்து குளிர்ந்தநீரில் கழுவி விடவும் .

இதே போல் வாரம் இரண்டு முறை செய்து வர முகப்பரு ,கரும்புள்ளி, இவைகள் நீங்கும் மேலும் முகத்தின் தோல் பகுதியில் உள்ள இறந்த செல்
களை அகற்றும்,முகம் மென்மையாகும்,சிவப்பு அழகு கிடைக்கும்.

முகத்தில் அம்மை வடு ,தழும்பு நீங்க :

1 — கருவேப்பிலை – ஒரு கை பிடி
2 – கசகசா – ஒரு டீ ஸ்பூன்
3 – கஸ்தூரி மஞ்சள் – சிறிய துண்டு

இதனை அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து குளித்து வர அம்மை தழும்பு மறைந்துவிடும்.
ld434

Related posts

முகத்தை மசாஜ் செய்வது எப்படி

nathan

முக அழகை அதிகரிக்க தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க…நன்மைகள் ஏராளம்

nathan

டீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்

nathan

இந்த இயற்கையான பொருட்களை வச்சி வீட்டுல தயாரிக்கும் ஃபேஸ்பேக்

nathan

சிவப்பழகு தரும் பேஷியல் ஸ்க்ரப்

nathan

பெண்களின் கன்னங்கள் பளிச்சிட அழகு குறிப்புகள்

nathan

பெண்களே உஷார்! சீக்கிரமா கலர் ஆக நீங்க க்ரீம் யூஸ் செய்பவரா?

nathan

முக அழகை கெடுக்கும் தோல் சுருக்கத்தை போக்க சில வழிகளை பார்க்கலாம்…

nathan

Homemade Face Mask-Pack For Brightening/Whitening And Glowing Skin

nathan