1441344991 6674
தொப்பை குறைய

தொப்பையைக் குறைக்க இதோ ஒரு சுலபமான வழி!

நீண்ட காலமாக தொப்பையைக் குறைக்க முடியாமல் தினறுகிறீர்களா? தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருகிறீர்களா? அப்படியெனில் அதோடு சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஒரு ஜூஸ் குடித்துவிட்டு தூங்கினால் தொப்பை விரைவில் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ். இஞ்சி, கொத்தமல்லி, எலுமிச்சை மற்றும் பல பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸை தூங்குவதற்கு முன் குடிக்கவும். ஏனெனில் இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களில் உள்ள சக்தி வாய்ந்த மருத்து குணங்களால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் விரைவில் கரையுமாம்.

வெள்ளரிக்காய்: தொப்பையைக் குறைக்க வேண்டுமெனில் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதிலும் ஒரு முழு வெள்ளரிக்காயில் 45 கலோரிகள் தான் உள்ளது. எனவே இதனை சாப்பிடுவதில் எவ்வித பிரச்சனையும் நேராது.

கொத்தமல்லியில் கலோரிகள் குறைவாகவும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், அது உடலை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும்.

எலுமிச்சை எலுமிச்சையில் உள்ள

சிட்ரிக் ஆசிட், கொழுப்புக்கள் உடலில் சேராமல் தடுப்பதோடு, தேங்கியுள்ள கொழுப்புக்கள் எளிதில் கரைந்து, நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றிவிடும்.

இஞ்சி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, மலச்சிக்கலைத் தடுத்து, கொழுப்புகளை கரைக்கும். எனவே உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள பொருள், கொழுப்புகளை விரைவில் கரைத்து, தொப்பையைக் குறைக்க உதவும்.

கற்றாழை ஜூஸ் கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ ராடிக்கல்களின் வளர்ச்சியைக் குறைத்து, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, ஆற்றலை அதிகரித்து, தேங்கியுள்ள கொழுப்புக்களை கரையச் செய்யும்.

ஜூஸ் செய்முறை:

வெள்ளரிக்காய் – 1
கொத்தமல்லி – 1 கட்டு
எலுமிச்சை – 1 துருவிய
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 டம்ளர்

மேற்கூறிய பொருட்களை சாறு எடுத்து, தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால், உங்கள் தொப்பை விரைவில் குறைவதை காணலாம்.
1441344991 6674

Related posts

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்.

nathan

இதயத் துடிப்பை சீராக்கும் புஷ் அப் வித் ரொட்டேஷன் பயிற்சி

nathan

மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!

nathan

எளிதில் தொப்பையை குறைக்கும் 15 சிறந்த வழிகள்!

nathan

வயிற்றை சுற்றி டயரு வர ஆரம்பிக்குதா? அத பஞ்சராக்க உதவும் உணவுகள்!!!

nathan

தொப்பையைக் குறைக்கவா..? 15 நாட்களில் சிறந்த வழி.

nathan

தொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்… 5 பழங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! தொப்பையை வேகமாக குறைக்க இந்த பழம் சாப்பிடுங்க!

nathan

பெண்களின் வயிற்று சதை குறைவதற்கு!

nathan