30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
Daily News 3374553918839
மருத்துவ குறிப்பு

ஒரே நிமிடத்தில் எடையை மாற்றலாம்

ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காகச் செல்கிறீர்கள். எடை பார்க்கும் மெஷின் கண்ணில் படுகிறது. ‘எதற்கும் பார்த்து வைக்கலாம்… நமது பி.எம்.ஐ. சரியாக இருக்கிறதா என்று டெஸ்ட் பண்ணி விடலாம்’ என வெயிட் மெஷினில் ஏறி நின்றால் அதிர்ச்சி காத்திருக்கிறது. நீங்கள் யூகித்த எடையைவிட 5 கிலோ அதிகமாக ரிசல்ட் வருகிறது. என்ன செய்வீர்கள்? ‘உடனடியாக எடையைக் குறைக்க வேண்டும். நாளையிலிருந்து கண்டிப்பாக வாக்கிங் போக வேண்டும். எடை கூடினால் முழங்கால் வலி வந்துவிடுமே, சுகர் அதிகமாகிவிடுமே, உடனடியாக குடும்ப டாக்டரைப் பார்க்க வேண்டும்’ என்று சில நிமிடங்களில் கற்பனை எங்கெங்கோ பறக்கிறது.

சரி! இப்படியும் யோசிப்போம். நீங்கள் மெலிந்த உடம்பாக இருக்கிறீர்கள். ‘ஒட்டடைக்குச்சி’ என்று எப்போதும் உங்களை நக்கல் அடிக்கிறார்கள். நீங்களும் உடம்பைத் தேற்ற வேண்டும் என்று பாதாமும், பிஸ்தாவும், பிரியாணியும், சாக்லெட்டும் சாப்பிட்டு ஜிம்முக்குப் போய் வெயிட் ஏத்துகிறீர்கள். ஜிம் பாடி மாதிரி கட்டுமஸ்தான வெயிட் மெஷினில் ஏறி நின்றால், நீங்கள் யூகித்ததைவிட எக்குத்தப்பாக வெயிட் குறைந்திருக்கிறது. என்ன செய்வீர்கள்?

உங்கள் இரண்டு பேருக்கும் ஒரு ஐடியா சொல்கிறேன்… ஒருவருக்கு எடை குறைக்க வேண்டும்; இன்னொருவருக்கு எடை கூட்ட வேண்டும். இரண்டு பேருக்கும் ஒரே சூப்பர் ஐடியா. எடை மெஷினில் நின்றபடியே உங்கள் எடையை மாற்றிக் கொண்டு திருப்தியாக கீழே இறங்கலாம். முதலில் எடை குறைக்க வேண்டும் என்று விரும்புவர் வெயிட் மெஷினில் ஏறிக் கொள்ளவும். நீங்கள் ’60 கிலோ இருக்க வேண்டும்’ என்றுதானே எதிர்பார்த்தீர்கள். ஆனால் வெயிட் மெஷின் ’65’ கிலோ காட்டுகிறது என்று அருகில் இருப்பவர் பார்த்து விட்டுச் சொல்கிறார். கவலைப்பட வேண்டாம்… நேராக விறைப்புக் காட்டி நிற்க வேண்டாம். நீங்களே ‘நன்றாக’ குனிந்து எடையைப் பாருங்கள். எடை காட்டும் பட்டையை குனிந்து உற்றுப் பார்த்தால், நிச்சயமாக 60 கிலோ எடைதான் இருப்பீர்கள். சந்தோஷமாக இறங்கிக்கொள்ளுங்கள்.

நெக்ஸ்ட்…

வாங்க பாஸ், உங்களுக்குத்தானே எடையைக் கூட்ட வேண்டும்! வெயிட் மெஷினில் ஏறி நின்றுகொள்ளுங்கள். உங்களுக்கு ’40 கிலோதான் காட்டுகிறது’ என்று அருகில் இருக்கும் நண்பர் சொல்கிறார். நீங்களும் கவலைப்பட வேண்டாம். உங்கள் இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கொள்ளுங்கள். இப்போது உங்களின் எடையைப் பார்க்கச் சொல்லுங்கள். கண்டிப்பாக எடை கூடியிருக்கும். சந்தோஷமாக இறங்கிக்கொள்ளுங்கள். இந்தக் கட்டுரையில் சொல்ல வந்த விஷயத்தை ஓரளவு உங்களால் ஊகித்திருக்க முடியும்.

தராசுத் தட்டின் மீது அசையாமல் நேராக நின்றால்தான் உங்களுடைய சரியான எடை தெரியும். நீங்கள் முன்னால் குனியும்போது உங்கள் உடலில் உள்ள தசை மண்டலம் (மஸ்குலர் சிஸ்டம்) உங்கள் உடலின் கீழ்ப்பகுதியை மேல் நோக்கி இழுக்கிறது. அதனால் உங்கள் உடல், தராசுத் தட்டின் மீது கொடுக்கும் அழுத்தம் குறைந்து போய் விடுகிறது. நீங்கள் நிமிர்ந்து நிற்கும்போதுதான் உங்கள் உடலின் முழு எடையும் பாதங்களின் வழியாக தராசுத் தட்டின் மீது அழுத்தமாக கொடுக்கப்படுகிறது. எனவே, நேராக நிற்கும்போது அழுத்தம் அதிகரிப்பதால் தராசுத் தட்டு அதிக எடையை (அதாவது, சரியான எடையைக்) காட்டுகிறது. அதுவே நீங்கள் முன்னால் குனிந்தால், உடல் அழுத்தம் மேல் நோக்கி இழுக்கப்பட்டு தராசுத் தட்டின் மீதான அழுத்தம் குறைந்து உங்கள் எடையைக் குறைத்துக் காட்டுகிறது.

இப்போதெல்லாம் ெராம்பவும் சென்சிடிவான, நுட்பமான எலக்ட்ரானிக் தராசு கள் வந்துவிட்டன. இதில் சின்ன அசைவு கள் மூலம் கூட உங்கள் எடையை மாற்றிக் காட்ட முடியும். இரண்டு கைகளையும் நீங்கள் மேல் நோக்கி உயர்த்தும்போது, உங்கள் கைகளின் மொத்த எடை தோள்களின் மீது விழுந்து உங்கள் உடலின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இவ்வாறு கூடிய எடை, பாதங்களின் வழியாக தராசுத்தட்டில் அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து எடையைக் கூடுதலாகக் காட்டுகிறது. உயர்த்திய கைகளைக் கீழே கொண்டு வந்துவிட்டால், உங்கள் உடலின் வேறு ஒரு தசைத் தொகுப்பு எதிர்த்திசையில், அல்லது மேல் திசையில் வேலை செய்யத் தொடங்குகிறது. எனவே தராசுத் தட்டின் மீது அழுத்தம் குறைந்து முன்பைவிட குறைவான எடையைக் (சரியான எடையை) காட்டுகிறது.

இதில் விசேஷம் என்னவென்றால், கைகளை மேல்நோக்கி உயர்த்தினால் கூடுதலான எடையையும், முன்னோக்கி நீட்டினால் அதைவிட குறைவான எடையையும் தராசுத் தட்டு காட்டும். மேலே உயர்த்திய கைகளைக் கீழே கொண்டு வர, கொண்டு வர, உங்கள் எடை குறைந்து கொண்டே வருகின்ற ஆச்சரியத்தை நீங்கள் பார்க்க முடியும். அதிசயம் ஒன்றும் இல்லை. நீங்கள் தராசுத்தட்டில் நேராக நிற்கும்போது உங்கள் முழு அழுத்தமும் பாதங்கள் வழியே இறங்கும். இதுவே சரியான எடை. மற்றபடி உங்கள் தசைகளின் இயக்கத்தை மாற்றி உங்களின் எடையைக் கூட்டவோ, குறைக்கவோ முடியும். இங்கு ஒரு அறிவியல் தத்துவத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். தராசுத் தட்டின் மீது நமது உடல் செலுத்தும் அழுத்தத்தையே எடை என்று கணக்கிட்டு வருகிறோம். உண்மையிலேயே உங்கள் எடையைக் கூட்டவோ, குறைக்கவோ முடியும் என்று நம்பி நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்திருந்தால் ஹி… ஹி… ஸாரி!
Daily News 3374553918839

Related posts

சின்னம்மை தாக்கினால் ஏற்படுத்தும் வடுவை குணமாக சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

nathan

பூண்டை அதிகமாக சாப்பிட்டு வந்தால் இப்படி ஒரு அதிர்ச்சியான பக்க விளைவுகள் இருக்கு தெரியுமா?

nathan

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அசாதாரண அறிகுறிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் கர்ப்பகாலத்தில் இளநீரை அருந்தலாமா?

nathan

வெயில் காலத்தில் வரும் நீர்க்கடுப்பு பிரச்சனைக்கு இயற்கை மருத்தும்

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சை தோல் கொதிக்க வைத்த தண்ணீரின் நன்மைகள்…!!

nathan

மாணவர்களுக்கு ஆற்றலை அதிகரிக்கும் பகல் நேர குட்டித் தூக்கம்

nathan

அலர்ஜியை சமாளிப்பது எப்படி?

nathan

இதயத்தை இயக்கும் துணை அமைப்புகள்

nathan