31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

முகம் கருப்பாக இருந்தால் வீட்டில் இருந்தே வெள்ளையாக இயற்கை வழியில் சில பியூட்டி டிப்ஸ்.!

கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.

அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.

3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும்.

கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

Related posts

முகத்தில் வரும் பருக்களை 1 மாதத்தில் போக்க வீட்டு வைத்தியம்

nathan

சோப்புகளின்றி முகத்தை எப்படியெல்லாம் சுத்தம் செய்யலாம் எனத் தெரியுமா?

nathan

முகத்திலிருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்ற இதோ சில எளிய டிப்ஸ்…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு

nathan

சீழ் நிறைந்த பருக்களால் வந்த தழும்புகளை நீக்க உதவும் எண்ணெய்கள்!!!

nathan

அவசியம் படிக்க..முகப்பருவிற்கு போடும் கிரீம் வயிற்றில் உள்ள சிசுவின் இதயத்தை பாதிக்குமா?

nathan

சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய்!….சூப்பர் டிப்ஸ்

nathan

முகத்துக்கு அழகூட்டும் சில ஃபேஸ் பேக்|

nathan

தழும்புகளை மறைய வைக்க ‘விட்டமின் ஈ’ உதவுமா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan