30.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
19 1453184283 6 glycerinpack
கால்கள் பராமரிப்பு

ஒரே வாரத்தில் பாதங்களில் உள்ள வெடிப்பைப் போக்குவதற்கான சில வழிகள்!

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு காரணம் பாதங்களில் அளவுக்கு அதிகமாக வறட்சி ஏற்படுவது தான். நம் உடலிலேயே உள்ளங்கை மற்றும் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகளே இல்லை. அதனால் தான் அவ்விடங்களில் அதிகளவு வறட்சி ஏற்படுகிறது. ஆனால் அவ்விடங்களுக்கு போதிய அளவில் ஈரப்பசையை வழங்க வேண்டியது அவசியம்.

பொதுவாக உள்ளங்கையில் உள்ள சருமம் மென்மையாகவும், பாதங்களில் உள்ள சருமம் கடினமாகவும் இருக்கும். எனவே பாதங்களுக்கு இன்னும் அதிகளவிலான பராமரிப்பைக் கொடுக்க வேண்டும். அதற்கு அடிக்கடி பாதங்களில் உள்ள இறந்த தோல்களை நீக்கி, பாதங்களில் நேச்சுரல் மாய்ஸ்சுரைசர்களைத் தடவ வேண்டும். அதுமட்டுமின்றி குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.

சரி, இப்போது பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழம்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்

எலுமிச்சை சாறு

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும். குறிப்பாக இச்செயலை செய்த பின்னர், பாதங்கள் உலர்ந்ததும்,

சோப்புத் தண்ணீர்

குதிகால் வெடிப்பை விரைவில் நீக்குவதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் இது. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து கால்களை நீரில் கழுவிய பின் உலர வைக்க வேண்டும். பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.

கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர்

கிளிசரினில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் அதனை பாதங்களில் தடவி வர, பாதங்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைய ஆரம்பிக்கும்

பாராஃப்பின் மெழுகு

பாராஃப்பின் மெழுகை உருக்கி, அதில் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதிகம் வறட்சியடையும் குதிகாலில் தினமும் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம், ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கிளிசரின், ரோஸ்வாட்டர்,

எலுமிச்சை சாறு தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என பாதங்களை ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள சோர்வு நீங்கும். மேலும் 2 டீஸ்பூன் கிளிசரின், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் தொடர்ந்து செய்வதால், பாதங்கள் மென்மையாவதோடு, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

19 1453184283 6 glycerinpack

Related posts

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்

nathan

கால், கை முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள்

nathan

நோய்களின் அறிகுறியான கால் வீக்கம்!

nathan

ஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

கை, கால், முகத்தில் இருக்கும் முடியை நீக்குவதற்கு!…

sangika

பட்டுப்போன்ற பாதம் பெற ஆலோசனைகள்

nathan

எளிய முறையில் பாதம் பராமரிப்பு

nathan

கால்களையும் கொஞ்சம் கவனியுங்கள்! Tips to Care your feet

nathan

இதை வெறும் மாதத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே போதும் உங்கள் பாதங்கள் பட்டு போன்று பளபளக்கும்!…

sangika