தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகளில் கலக்கப்படும் உலோகங்கள் பெண்களின் மென்மையான சருமத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன. அசல் நகை, கவரிங் நகை எதுவாக இருந்தாலும் அலர்ஜி ஏற்படவே செய்யும். இது நிக்கர் டெர்மடைடிஸ் காண்டெக்ட் டெம்டைடிஸ் அல்லது நிக்கல் அலர்ஜி எனப்படும்.
இந்த அலர்ஜி எந்த வயதிலும், எந்த பருவ காலத்திலும் ஏற்படும். இது அவரவர் உடல் தன்மையை பொறுத்தது. மனித உடலில் நிக்கல் உலோகத்தின் வெப்பநிலையை ஏற்றுக்கொள்ளும் திறனைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அலர்ஜி வந்து விட்டால் நகைகள் அணிவதை தவிர்ப்பதே நல்லது. ஆரம்பத்தில் வரும் சிறிய அளவிலான அலர்ஜி, பின்பு பெரிய பிரச்சினையகிறது.
ஒரு முறை அலர்ஜி ஏற்பட்டால் அது குணமாக அதிக ஆண்டுகள் வரை நீடிக்கும். பிறகு வாழ்நாள் முழுக்க அலர்ஜி தொடரும். சுத்தமான தங்கம் அலர்ஜி அற்றது. ஆனால், சொக்கத் தங்கத்தில் அணிகலன்கள் செய்ய முடியாது. அதோடு செம்பு, நிக்கல், துத்தநாகம், கோபால்ட், குரோமியம் சேர்த்து நகைகள் தயாரிக்கிறார்கள். இதில் துத்தநாகம், செம்பு எந்தவித தீங்கும் ஏற்படுத்தாது.
எந்த நகைகளில் நிக்கல் அளவு அதிகமாக இருக்கிறதோ, அதன் கோட்டிங் சரியில்லையோ அந்த நகையால் அலர்ஜி ஏற்படும். மற்றொரு முக்கிய காரணம் வியர்வை, கோடைகாலத்தில் அதிக நேரம் நகைகள் அணிவதால் வியர்வை ஏற்படும். இந்த வியர்வை நகையில் கலக்கப்பட்டுள்ள, உலோகங்களுடன் சேரும் போது நிக்கல் உப்பு வடிவில் வெளியாகும். இந்த உப்பு காரணமாக சருமத்தில் அலர்ஜி ஏற்படத் தொடங்கும். இத்தகைய அலர்ஜி பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே அதிகம் ஏற்படும்.
அலர்ஜிக்கான அறிகுறிகள்: நகை அணியும் இடங்களில் உள்ள சருமத்தில் தடிப்பு போல இருக்கும். சிவந்து காணப்படும். தோலின் நிறம் மாறிவிடும். நேரடியாக நகை படும் இடங்களில் சருமத்தில் அரிப்பு அல்லது எரிச்சல் இருக்கும். காது, மூக்கு, குத்திய இடங்களில் வீக்கம் அல்லது சீழ் வரும்.
அலர்ஜி ஏற்படாமல் இருக்க: நகை அணியும் முன்பு நகைகள் சுத்தமாக அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். குளித்த பிறகு காது மற்றும் கழுத்து பகுதியில் நன்கு துடைத்த பின்பு நகை அணிய வேண்டும். கம்மல், மோதிரம், செயின் போன்றவற்றை இறுக்கமாக அணியக் கூடாது.