25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
YHHh73ECdin
அசைவ வகைகள்

தலபாக்கட்டி மட்டன் பிரியாணி: சுலபமான முறை

என்னென்ன தேவை?
மட்டன் – 1/2 கிலோ,
சீரக சம்பா அரிசி – 3 கப்,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
நெய் – 2 டேபிள் ஸ்பூன்,
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் – 3 (நீளமாக கீறியது),
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது),
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி – 1/4 கப் (நறுக்கியது),
புதினா – 1/4 கப் (நறுக்கியது),
தண்ணீர் – 4 1/2 கப்.
பிரியாணி மசாலாப் பொடிக்கு.
பட்டை – 4,
சோம்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்,
கல்பாசி – 5,
சீரகம் – 2 டீஸ்பூன்,
கிராம்பு – 5,
ஏலக்காய் – 5,
அன்னாசிப்பூ – 1.
எப்படிச் செய்வது?

முதலில் சீரக சம்பா அரிசியை நீரில் நன்கு அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பிரியாணி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி, அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து சிறிது நேரம் பிரட்டி, பின் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் மட்டனை சேர்த்து நன்கு பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 7-8 விசில் விட்டு, தீயை குறைத்து 15 நிமிடம் வேக வைத்து இறக்கி விட வேண்டும். விசில் போனதும், குக்கரை திறந்து, அதில் தண்ணீர் இருந்தால், மீண்டும் அடுப்பில் வைத்து, நீரை வற்ற வைக்க வேண்டும். இறுதியில் அதில் அரிசியை போட்டு நன்கு கிளறி, பின் 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்ததும், குக்கரை மூடி 1 விசில் விட்டு, தீயை குறைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி ரெடி!!!
YHHh73ECdin

Related posts

வறுத்த கோழி குழம்பு

nathan

மட்டன் குருமா

nathan

புத்தாண்டு ஸ்பெஷல்: செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட்

nathan

உங்களுக்கு தெரியுமா ஸ்பேஷல் மட்டன் கிரேவி செய்வது எப்படி????

nathan

சுவையான மட்டன் கடாய்

nathan

நாட்டுக்கோழி மசாலா

nathan

செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பு

nathan

சுவையான முட்டை கறி செய்ய !!

nathan

ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்வது எப்படி

nathan