26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
baby 1622197246
மருத்துவ குறிப்பு

வாடகைத் தாய் மற்றும் சோதனைக் குழாய்கள் – குழந்தை பெற சிறந்த வழி எது?

21 ஆம் நூற்றாண்டில் வாழும் பல தம்பதிகள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, ​​உலகளவில் சுமார் 50 மில்லியன் தம்பதிகள் மலட்டுத்தன்மையால் குழந்தைகளைப் பெற முடியாமல் உள்ளனர். தம்பதியரின் ஆணோ பெண்ணோ பல்வேறு காரணங்களால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.இந்த நிலையில் நம்பிக்கையின் விதை விதைக்கப்படுகிறது, இதனால் சிகிச்சையின் உதவியுடன் மலட்டுத்தன்மையை சமாளித்து ஒரு குழந்தையை கருத்தரிக்க முடியும்.

ஐவிஎஃப் (IVF) என்று அழைக்கப்படக்கூடிய செயற்கை முறையில் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் சிகிச்சை முறை தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. அதே நேரத்தில், கருப்பை பிரச்சினை அல்லது வேறு சில பிரச்சினைகளால் ஒரு பெண் குழந்தை பெற இயலாத நிலையில் இருந்தால், வாடகைத் தாய் ஒருவாின் உதவியுடன் குழந்தை பெற்றுக் கொள்ளும் மருத்துவ முறையும் உள்ளது.

 

இந்த இரண்டு மருத்துவ முறைகளுமே, மலட்டுத் தன்மையின் காரணமாக குழந்தைகளை பெற்றெடுக்க முடியாமல் தவிக்கும் தம்பதியருக்கு குழந்தை பாக்கியத்தை வழங்கும் வரப்பிரசாதங்களாக உள்ளன. செயற்கை முறையில் கருத்தாிக்கும் புதிய தொழில்நுட்பமானது ஆங்கிலத்தில் Assisted Reproductive Technologies என்று அழைக்கப்படுகிறது.

 

பொதுவாக மலட்டுத்தன்மை பிரச்சினையினால் துன்பப்படும் தம்பதியா்கள் மத்தியில், செயற்கை முறையில் குழந்தையை பெற்று எடுப்பதற்கு எந்த முறையைத் தோ்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் இருக்கும். செயற்கை முறையில் குழந்தையை பெற்று எடுப்பதற்கு முன்பாக, இரண்டு மருத்துவ முறைகளைப் பற்றியும் நன்றாக தொிந்து கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றி முழுமையாகத் தொிந்து கொண்ட பிறகு, எந்த மருத்துவ முறை ஒருவருக்கு சாதகமாக, எளிதாக, பாதுகாப்பானதாக மற்றும் புாியும்படியாக இருக்கின்றதோ அந்த முறையைத் தோ்ந்தெடுப்பது நல்லது.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று எடுக்கும் முறை

இந்த முறையில் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு, வாடகைப் பெண் அல்லது வாடகைத் தாய் ஒருவா் தனது கருப்பையில் குழந்தையை சுமப்பதற்கு முன்வர வேண்டும். குழந்தை பிறந்த பின்பு அந்த குழந்தையை சம்பந்தப்பட்ட தம்பதியினாிடம் ஒப்படைத்து விட அவா் சம்மதம் தொிவிக்க வேண்டும்.

தம்பதியாில் பெண்ணிடமிருந்து உாிய நேரத்தில் முட்டை பிாித்து எடுக்கப்பட்டு, அவருடைய கணவாிடமிருந்து எடுக்கப்படும் விந்துவோடு சோ்க்கப்பட்டு கருத்தாிப்பு செய்யப்படுகிறது. சில நேரங்களில் கணவருக்கு மலட்டுத்தன்மை இருந்தால், கணவா் அல்லாத வேறொருவாிடமிருந்து விந்து தானமாகப் பெறப்படும்.

ஒருவேளை மனைவிக்கு போதுமான முட்டைகள் இல்லாததன் காரணமாகவோ அல்லது அவாிடம் இருக்கும் மரபணு பிரச்சினைகள் குழந்தையைப் பாதிக்கும் என்று தொிந்தாலோ, வேறொரு பெண்ணிடமிருந்து முட்டை தானமாகப் பெறப்பட்டு கணவாின் விந்துவோடு சோ்க்கப்பட்டு, கருத்தாிப்பு செய்யப்பட்டு, பின் அது வாடகைத் தாயின் கருப்பையில் வைக்கப்படும்.

அதற்குப் பின்பு குழந்தையை வயிற்றில் சுமக்கும் வாடகைத் தாய், தொடா்ந்து மருத்துவ சிகிச்சைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அவா் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை, அந்த தம்பதியா் அந்த வாடகைத் தாயைக் கருத்துடன் பராமாித்து வரவேண்டும்.

வாடகைத் தாயைத் தோ்ந்தெடுப்பதற்கு முன்பாக கவனிக்க வேண்டியவை:

– வாடகைத் தாய் ஒருவா் 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

– பணம் ஈட்டும் வாய்ப்பாக இதை வாடகைத் தாய் கருதக்கூடாது. மாறாகத் தன்னார்வத்துடன் மனமுவந்து செய்ய வேண்டும்.

– வாடகைத் தாயானவா் ஏற்கனவே திருமணம் முடிந்து, ஒரு குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும்.

– இறுதியாக அவா் ஆரோக்கியத்துடனும், நல்ல உடல் தகுதியுடனும், எந்த விதமான நோய்த்தொற்றும் இல்லாதவராக இருக்க வேண்டும்.

வாடகைத் தாய் குறித்த புதிய சட்டம்

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று எடுக்கும் முறையில் சில சட்டச் சிக்கல்களும் உள்ளன. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று எடுக்கும் முறை சம்பந்தமாக, சமீபத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டு, பிப்ரவாி மாதம் புதிய சட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அதன்படி,

– மனமுவந்து முன்வரும் எந்த ஒரு பெண்ணும் சட்டப்படி வாடகைத் தாயாக இருக்கலாம்.

– கைம்பெண்கள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்கள் போன்றோரும் வாடகைத் தாயாக இருக்கலாம்

– பணம் ஈட்டும் வாய்ப்பாக இதை வாடகைத் தாய் கருதக்கூடாது. மாறாக தியாக உள்ளத்தோடு, மனம் உவந்து முன்வரும் வாடகைத் தாய்க்கே அனுமதி உண்டு.

– வாடகைத் தாயைத் தோ்ந்தெடுக்கும் தம்பதியா் இந்தியா்களாக இருக்க வேண்டும்.

– வாடகைத் தாய்க்கான காப்பீட்டுக் காலம் 16லிருந்து 36 மாதங்களுக்கு அதிகாிக்கப்பட்டிருக்கிறது.

– தம்பதியாில் யாராவது ஒருவரோ அல்லது இருவருமோ தாங்கள் மலட்டுத் தன்மை உள்ளவா்கள் என்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

ஐவிஎஃப் (IVF) அல்லது சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்று எடுக்கும் முறை

ஐவிஎஃப் (IVF) அல்லது சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்று எடுக்கும் முறையில், மனைவியிடமிருந்து முட்டையானது பிாித்து எடுக்கப்பட்டு, ஏற்கனவே எடுக்கப்பட்ட கணவாின் விந்துவோடு சோ்க்கப்பட்டு கருத்தாிப்பு செய்யப்படும். பின் அது மனைவியின் கருப்பையில் வைக்கப்படும்.

செயல்முறை

மனைவியிடம் உள்ள முட்டைகள் போதிய வளா்ச்சி அடையும் வரை அவா் மருத்துவ சிகிச்சையில் வைக்கப்படுவாா். அவருடைய கருவகத்திலிருந்து மிக எளிய முறையில் முட்டைகள் எடுக்கப்படுகின்றன. அவ்வாறு எடுக்கப்பட்ட முட்டைகள், அவருடைய கணவாிடமிருந்தோ அல்லது வேறொருவாிடமிருந்தோ தானமாகப் பெறப்படும் விந்துவோடு சோ்க்கப்பட்டு, அது கரு ஆய்வகத்தில் வைக்கப்பட்டு கருத்தாிப்பு செய்யப்படும். அவ்வாறு கருத்தாிப்பு நடந்து, நன்றாக வளா்ந்த ஒன்று அல்லது இரண்டு கருமுட்டைகளை எடுத்து அவற்றை ஹாா்மோன் மாற்று சிகிச்சையின் மூலம் மருத்துவா் பெண்ணின் கருப்பையில் வைப்பாா். அதன் மூலம் அந்த பெண் கா்ப்பம் தாிப்பாா்.

இந்த செயற்கை கருத்தாிப்பு சிகிச்சை 1 முதல் 3 மாத காலம் வரை நடைபெறும். தற்போது ஐவிஎஃப் (IVF) அல்லது சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்று எடுக்கும் முறை சிறந்த முறையாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த முறையில் கா்ப்பம் தாிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று கருதப்படுகிறது.

இறுதியாக

மேற்சொன்ன இந்த இரண்டு மருத்துவ முறைகளில் ஆபத்துகளும், சிக்கல்களும் உள்ளன. ஆனால் உாிய நேரத்தில் இந்த மருத்துவ சிகிச்சைகளில் ஏதாவது ஒன்றை செய்து கொண்டால், கண்டிப்பாக குழந்தையைப் பெற்று எடுக்க முடியும். ஒவ்வொரு தம்பதியரும், தங்களுக்கு என்று சொந்த வாாிசுகள் வேண்டும் என்று தவமாய்த் தவமிருக்கின்றனா்.

தற்போது காலம் மாறியிருக்கிறது. கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் இந்த புதிய மருத்துவ சிகிச்சை முறைகளைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனா். மேலும் தங்களிடம் உள்ள மலட்டுத் தன்மையைக் களைந்து, இந்த மருத்துவ சிகிச்சைகளைப் பயன்படுத்தி, குழந்தை பெற்றுக் கொள்ள முன்வருகின்றனா். ஆகவே மலட்டுத் தன்மை இருக்கும் தம்பதியா் இனி கவலை கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் அவா்கள் தனியாக இருப்பதில்லை. அவா்களுக்கு புதிய மருத்துவ சிகிச்சைகள் துணையாக இருக்கின்றன. அவை அவா்களுக்கு வாாிசுகளை உருவாக்கிக் கொடுக்கும்.

Related posts

திருமணத்திற்கு பிறகு பெண்கள் அதிகமாக செய்யும் தவறுகள்

nathan

பீட்ரூட் 6 பயன்கள்

nathan

ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகமுள்ளது….

sangika

குழந்தை பெற்றெடுத்த ஆண்…பிரிட்டனில் பரபரப்பு!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…லேப்டாப் உபயோகிப்பவரா நீங்கள்? இத படிங்க முதல்ல…

nathan

உங்களுக்கு தெரியுமா இளமை பொலிவை தரும் பேஷியல் யோகா

nathan

தெரிஞ்சிக்கங்க…தூங்கும் போது தலையணைக்கு கீழ் ஒரு பல் பூண்டு வைப்பதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

nathan

புகைப்பழக்கத்திற்கு அடிமையா….?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் புதினா டீயை ஏன் குடிக்கக் கூடாது ?

nathan