தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ
பச்சை மிளகாய், வெங்காயம் – தலா 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை – 2
சிலோன் கறி பவுடர் – கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
தேங்காய் பால் – 2 கப்
எலுமிச்சை சாறு – 3 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
சிலோன் சிக்கன் பரோட்டா…இனி சுடச் சுட வீட்டிலேயே செய்யலாம்! | Ceylon Chicken Parotta
சிலோன் கறி பவுடர் செய்ய
தனியா, சீரகம் – தலா 2 மேசைக்கரண்டி
அரிசி, சோம்பு – தலா ஒரு தேக்கரண்டி
வெந்தயம் – கால் தேக்கரண்டி
பட்டை – சிறிய துண்டு
ஏலக்காய், கிராம்பு – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
சிலோன் சிக்கன் பரோட்டா…இனி சுடச் சுட வீட்டிலேயே செய்யலாம்! | Ceylon Chicken Parotta
பரோட்டா செய்ய
மைதா மாவு – 2 கப்
முட்டை – 2
சர்க்கரை – அரை தேக்கரண்டி
பால் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
சிலோன் சிக்கன் பரோட்டா…இனி சுடச் சுட வீட்டிலேயே செய்யலாம்! | Ceylon Chicken Parotta
செய்முறை
முதலில் பரோட்டா செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக பாலும், தேவையெனில் தண்ணீரும் தெளித்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
சிலோன் கறி பவுடர் செய்ய தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக வெறும் கடாயில் போட்டு வறுத்தெடுக்கவும். நன்றாக ஆறியதும் கொரகொரப்பாக பொடியாக திரித்து கொள்ளவும்.
சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
சிலோன் சிக்கன் பரோட்டா…இனி சுடச் சுட வீட்டிலேயே செய்யலாம்! | Ceylon Chicken Parotta
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு வதக்கவும். சிக்கன் சில நிமிடங்களில் கலர் மாறி அதிலிருந்து நீர் வெளியேற ஆரம்பித்தவுடன் சிக்கனை மட்டும் தனியே எடுத்து விடவேண்டும்.
அதே நெயில் வெங்காயம், பூண்டு இஞ்சி விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது (முழுவதுமாக பொன்னிறமாகக் கூடாது) வதங்கியவுடன் உப்பு, பிரிஞ்சி இலை,