தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* பட்டை – 1 சிறிய துண்டு
* பிரியாணி இலை – 1
* வெங்காயம் – 1 (பெரியது, பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2
* தக்காளி – 2 (அரைத்துக் கொள்ளவும்)
* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு – 1 (பெரியது, தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* மீல் மேக்கர் – 1 கப்
* பால் – 1/2 கப்
* கொத்தமல்லி – சிறிது
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி கிளறி நன்கு எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கு வேகும் வரை மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு வெந்ததும், அதில் மீல் மேக்கரை சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி, மீண்டும் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் பால் ஊற்றி, கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கினால், சுவையான மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா தயார்.