25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
chettinad sura fish kuzhambu
அசைவ வகைகள்

சுவையான செட்டிநாடு சுறா மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

* சுறா மீன் – 500 கிராம்

* சின்ன வெங்காயம் – 15 (நறுக்கியது)

* பூண்டு – 5 பல் (நறுக்கியது)

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 3 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* சோம்பு தூள் – 1 டீஸ்பூன்

* சீரகத் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – தேவையான அளவு

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – 1 1/2 கப்

* புளி நீர் – 1/4 கப்

* கறிவேப்பிலை – சிறிது

* வரமிளகாய் – 3

செய்முறை:

* முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் கழுவிய மீனில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சோம்பு தூள் சேர்த்து, அதன் பின் புளி நீரை ஊற்றி நன்கு கிளறி, அதோடு 1 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குழம்பை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், மூடி வைத்து மிதமான தீயில் 5-6 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்னர் மீன் துண்டுகளை சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் மீன் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு சுறா மீன் குழம்பு தயார்.

Related posts

சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா மசாலா சிக்கன் பிரை

nathan

சூப்பரான சிக்கன் பட்டர் மசாலா

nathan

கணவாய் மீன் பொரியல்

nathan

சிக்கன் ரோஷ்ட் சாப்பிட்டதுண்டா இன்றே செய்து சாப்பிடுங்கள்……..

sangika

சுறா மீன் புட்டு

nathan

நண்டு மசாலா

nathan

சுவையான சிக்கன் ப்ரை ரெசிபி

nathan

சூப்பரான ரவா மீன் ப்ரை

nathan

காரசாரமான ஆட்டு மூளை மசாலா

nathan