28 C
Chennai
Saturday, Dec 13, 2025
photo
ஆண்களுக்கு

ஆண்களின் வழுக்கை பிரச்சினைக்கு தீர்வு தரும் இயற்கை மருந்துகள் !

வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது.

⭕ எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள். அந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும்.
இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும். ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும்.

⭕ இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவது வரை காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மசாஜ் செய்துவந்தால் முடிவளரும்.

⭕ ஆனைத் தந்தத்தைப் பொடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம். ஆனைத் தந்தத்தைப் பஸ்மம் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் புரட்டுவதும் உண்டு. இதற்கு ஹஸ்திதந்த மஷி என்று பெயர்.

⭕ அதிமதுரத்தைப் பொடித்து குங்குமப்பூ சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். முடி முளைத்துவிடும். இது முடி உதிர்தலையும் தவிர்க்கும். பொடுகை நீக்கும்.

⭕ நவீனமருத்துவத்தில் ஹைட்ரோ கார்ட்டிஸனான் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள் தரப்படுகின்றன. அதிமதுரச் செடியில் கார்டிஸோனின் குணம் இருப்பதால் இவ்விளைவு ஏற்படுகிறதோ என்னவோ. ஊமத்தை விதைகள், அதிமதுரம், குங்குமப்பூ, பாலாடை இவற்றைத் தேங்காயெண்ணெயில் காய்ச்சி கருகும் வரைப் பயன்படுத்தவேண்டும்.

இந்தத் தைலமும் வழுக்கைப் பகுதிகளில் முடிவளரச் செய்கிறது. தத்தூர என்ற ஊமத்தை விஷத்தன்மை கொண்டது. எனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். த்ரிபலா க்ஷாரம் என்ற மருந்துண்டு. அதாவது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை வாணலியில் போட்டு வறுத்து, நல்ல கருநிறம் அடைந்தவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்கலாம். நன்றாக முடி வளரும்.
photo

Related posts

ஆண்களே! உங்க தாடி மென்மையா இருக்க அடிக்கடி இத செய்யுங்க…

nathan

கம்பீர ஆண்களுக்கு கச்சிதமான பிளாட்டின செயின்கள்

nathan

ஆண்களுக்கான அழகு டிப்ஸ் !!

nathan

ஆண்கள் அழகை பேணுவதில் கவனம் வேண்டும்!…

sangika

ஆண்களே! மென்மையான தாடி வேண்டுமா? அப்ப இத தினமும் யூஸ் பண்ணுங்க…

nathan

அழகை அதிகரிக்க நினைக்கும் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!

nathan

பண்டிகைகள் மற்றும் விழாக்களில் ஆண்களுக்கான அழகிய ஆடை எது தெரியுமா?..

sangika

சருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற!

sangika

அழகாக இருக்க நினைக்கும் ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

nathan