வழுக்கை தேங்காயை அரைத்து, அதோடு சிறிது இளநீர் கலந்து முகத்துக்கு கீழிருந்து மேல் புறமாக பூசி, காய்ந்ததும் அலம்புங்கள்.
தினமும் இப்படி செய்துவந்தால், மாசு மருவின்றி பளிங்குபோல முகம் மிளிரும்.
வெயிலால் வரும் கருமையை விரட்ட….
தேங்காய் பால் – 2 டீஸ்பூன்
கடலை மாவு – 1 டீஸ்பூன்
இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த “பேக்” போட்டு வர முகம் பிரகாசமாகும். இந்த “பேக்”கில் கடலை மாவுக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து புருவத்தில் படாமல் முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அலம்புவது இன்னொரு “பளிச்” சிகிச்சை.
முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் ட்ரீட்மெண்ட்….
கேரட் சாறு – 1 டீஸ்பூன்
தேங்காய் பால் – 1 டீஸ்பூன்
இரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து அலம்புங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் அழகு உங்களை அள்ளிக் கொண்டு போகும்.
முகத்தில் எண்ணெய் வடிகிறதா?
முல்தானிமட்டி – டீஸ்பூன்
தேங்காய் பால் – 1 டீஸ்பூன்
இரண்டையும் கலந்து முகத்துக்கு “பேக்” போடுங்கள். வாரம் ஒரு முறை இந்த “பேக்” போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும்.
முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் நீங்க…..
உருளைக்கிழங்கு ஜூஸ் – 1 டீஸ்பூன்
தேங்காய் பால் – 1 டீஸ்பூன்
பயத்த மாவு – 1 டீஸ்பூன்
மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு “பேக்” போடுங்கள். காய்ந்ததும் அலம்பி விடுங்கள்.
வாரம் இருமுறை இந்த “பேக்” போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.
“சூப்பரான ஒர் ஹேர் பேக்”…..
ஒரு பிடி பச்சை கறிவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து அரைத்து, தலையில் பேக் போட்டு பச்சை தண்ணீரில் அலசுங்கள்.ஒரு நாள் விட்டு ஒருநாள் இந்த பேக் போட்டுப் வாருங்கள். முடி வளர்ச்சி தூண்டப்பட்டு, கருகருவென முடி வளரத் தொடங்கும்.
உடலைக் குளுகுளுப்பாக்க….
ஒரு வழுக்கை தேங்காயுடன் தேங்காய்ப் பால் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்) குளிப்பதற்கு முன் இந்த விழுதை தலை முதல் பாதம் வரை நன்றாக பூசுங்கள். பிறகு தலைக்கு சியக்காய் போட்டு குளியுங்கள்.
வாரம் ஒரு முறை செய்தால் போதும். உடல் ஜில்லென்று இருப்பதுடன், வாசனையும் வனப்பும் ஆளையே அசரடிக்கும்.
“கலக்கல் பேக்” இது…
உலர்ந்த நெல்லிக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்
மருதாணி பவுடர் – 1 டீஸ்பூன்
வெந்தய பவுடர் – 1 டீஸ்பூன்
தேங்காய் பால் – 2 டீஸ்பூன்
இவற்றை எல்லாம் தேங்காய் பாலுடன் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் “பேக்” ஆகப் போட்டு ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை செய்தாலே போதும், கருகரு கூந்தலைப் பெறுவீர்.
தேங்காய் வைத்தியம்…
மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை… இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி, காயவைத்து பவுடராக்குங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள்.
பிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள். பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். (சியக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை). வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது.