23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 62e1d3141fda1
சமையல் குறிப்புகள்

கல்யாண வீட்டு வத்தக்குழம்பு!

தேவையான பொருட்கள்

சுண்டைக்காய் வத்தல்
சின்ன வெங்காயம்
தக்காளி
மிளகு
சீரகம்
வெந்தயம்
கடலைப்பருப்பு
மிளகாய் தூள்
புளி
நல்லெண்ணெய்
கல்யாண வீட்டு வத்தக்குழம்பு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்…இனி அடிக்கடி செய்யுவீங்க! | Vatha Kulambu Recipe

செய்முறை

முதலில் கடாயில் சிறிதளவு கடலைப்பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்தது, கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த சுண்டைக்காய் வத்தலை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அதே நல்லெண்ணெய் இருக்கும் கடாயில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

கல்யாண வீட்டு வத்தக்குழம்பு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்…இனி அடிக்கடி செய்யுவீங்க! | Vatha Kulambu Recipe

பின்பு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

இப்போது மிளகாய் தூள் சேர்த்து கிளறி அதில் வறுத்து வைத்துள்ள சுண்டைக்காய், பூண்டு சேர்த்து வதக்கி புளி கரைசலை சேர்க்க வேண்டும்.

புளி கரைசல் கொதித்து வரும் போது காரம் சரியாக இருக்கிறதா என பார்த்து, அரைத்து வைத்துள்ள மிளகு தூள் பொடியை அதில் சேர்க்க வேண்டும். நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

இப்போது சிறிதளவு வெல்லத்தை சேர்க்க வேண்டும். திக்கான வத்தக்குழம்பு பதத்திற்கு வந்தவுடன் இறக்கினால் சூப்பரான டேஸ்டியான கல்யாண வீட்டு வத்தக்குழம்பு தயார்.

Related posts

ருசியான சமையலுக்கு சில ரகசியங்கள்

nathan

ஆரோக்கியமான ஜீரண இடியாப்பம்!

sangika

புளி சேர்க்காத இந்த ரசமும், பருப்புத் துவையலும் நல்ல காம்பினேஷன்….

sangika

சுவையான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்

nathan

வெண் பொங்கல் செய்வது எப்படி?

nathan

சுவையான கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்

nathan

சுவையான பட்டர் குல்ச்சா

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கோதுமை மாவு கருப்பட்டி தோசை செய்வது எப்படி?

nathan

தக்காளி கெட்சப் பாஸ்தா!

nathan