சிம்ம லக்னத்தின் அதிபதி சூரிய பகவானவார். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் கம்பீரமானவர்கள். இவர்களை கண்டு பிறர் அஞ்சி தயங்கிப் பேசவும் மரியாதை கொடுக்கவும் வேண்டியிருக்கும். திடமான புத்தியுள்ளவர்களாக இருப்பார்கள் இருப்பார்கள். ஆனால்முன் கோபம் என்பது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். சிம்மம் என்ற பெயருக்கு ஏற்றார்போல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவே இருப்பார்கள்.
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதியில் தான் வசதி வாய்புகளுடன் நன்றாக வாழ்வார்கள். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலர் இந்த லக்னத்தில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்களிடம் கோபமும், பிடிவாத குணமும் அதிகம் இருக்கும். அதுவே இவர்களின் பலமும், பலவீனமும் ஆகும். தான் எப்படி நடந்து கொள்கிறாரோ அது போலவே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
இவர்கள் கவர்ச்சியான மற்றும் எடுப்பான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். தன்னம்பிக்கையுடன் கூடிய விடமுயற்சி கொண்டவர்கள். பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள்.
இவர்களுக்கு அதிக அளவிலான நண்பர்களும், உறவினர்களும் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு கட்டளையிடும் உயர்ந்த இடத்தில இருப்பார்கள். ஒரு மாபெரும் கூட்டத்துக்கு தலைவராக இருப்பார்கள். கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியானவர்கள். எதிலும் ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையாக நடக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் கலைகளிலும், இசையிலும் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். தன்நம்பிக்கை அதிகம் உள்ளவர். இவர்கள் தங்கள் பெற்றோர்களின் மேல் மிகுந்த பாசம் உள்ளவர்கள்.
இவர்கள் பிரபலமானவர்களாக விளங்குவார்கள். இவர்களுக்கு அரசிலும் சமுதாயத்திலும், நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கும். எதையும் ஆராய்ந்து பார்க்கும் மனம் கொண்டவர்கள். இவர்கள் தாங்கள் கொண்ட செயல்களில் உறுதியுடன் இருப்பார்கள். இவர்களை பின்னால் இருந்து கவிழ்க்க ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கும். தற்புகழ்ச்சியில் ஈடுபாடு கொண்டவர்கள். சிற்றின்ப பிரியராக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் எல்லா விதமான சுகங்களையும் அனுபவிப்பவர்கள்.
இவர்கள் படித்த படிப்பிற்கும், செய்யும் வேலைக்கும் சம்மந்தம் இருக்காது. அனாலும் செய்யும் வேலையில் சாதனையாளர்களாக இருப்பார்கள். இவர்கள் செலவுகளை பற்றி கொஞ்சமும் கவலைபட மாட்டார்கள். கடன் வாங்குவது இவர்களுக்கு பிடிக்காது. கடன் வாங்கினாலும் அதை சரியாக திருப்பி செலுத்தி விடுவார்கள். இவர்கள் பிறருடன் அனுசரித்து செல்வது என்பது மிகவும் கடினம்.