25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
urine
மருத்துவ குறிப்பு

சிறுநீர் பாதையில் நோய் தொற்றை தவிர்ப்பது எப்படி?ஆயுர்வேத சிகிச்சை

சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்று குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, சிறுநீரகம், யூரேட்டர், சிறுநீர்பை, சிறுநீர்குழாய் போன்றவற்றில் ஏற்படும் கிருமி தொற்றுகளையே சிறுநீர்ப்பாதை நோய் என்கிறோம். இதனை 2 ஆக பிரிக்கலாம். மேல் பாகம் சிறுநீரகம் மற்றும் யூரேடர். கீழ்ப்பாகம் சிறுநீர்பை மற்றும் யூரித்திரா. பெரும்பாலும் நோய் தொற்று கீழ்பாகத்தில் தான் ஏற்படும். நாளடைவில் மேல் நோக்கி நோய் தொற்று தொடருவதால் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.

50 சதவீத பெண்கள் இந்நோயினால் பாதிப்பு அடைகின்றனர். குறிப்பாக 20 முதல் 30 சதவீத பெண்களுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகிறது. ஆண்களுக்கு மிக அரிதாக காணப்படுகிறது. காரணம் ஆண்கள் மற்றும் பெண் உறுப்புகளின் மாற்றமே. பெண்களுக்கு ஆசன வாய்க்கும், யூரித்திராவிற்கும் இடைவெளி குறைவு. எனவே பெண்களை நோய் பலவிதத்தில் பாதிக்கிறது.

கர்ப்பகாலத்தில் இந்நோய் பாதிப்பு தொற்றினால் சிறுநீரக பாதிப்பு கூட ஏற்படும். கருவில் உள்ள குழந்தைக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படும். இந்நோய் சிறுநீர் பையை தாக்கினால் இதனை சிஸ்டைட்டிஸ் என்றும், யூரித்திராவை பாதிப்படைய செய்தால் சிறுநீரகத்தை பாதித்தால் பைலோபநெப்ரைட்டிஸ் எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் 3 முதல் 6 மாதத்தில் சிறுபாதிப்புகளை சந்திக்கிறார்கள்.

கண்டறியும் முறை:

ஆய்வகத்தில் சிறுநீரில் உள்ள நுண்ணுயிரை வளரச் செய்து அதன் தன்மைக்கு ஏற்ப கண்டறியலாம். பெரும்பாலும் ரத்த பரிசோதனை தேவை இல்லை என்றாலும் சிறுநீரகத்தின் நிலை அறிய ரத்த பரிசோதனை உதவுகிறது. கிரியாற்றினின் பரிசோதனை மூலம் இதன் செயல் திறனை அறியலாம்.

வகைகள்

கீழ்மார்க்க பாதிப்பு:

யூரித்திரா, சிறுநீர்பையில் நோய் தொற்று ஏற்பட்டால் இப்பாகத்தில் உள்ள தசைகளில் வீக்கமும் தொடர்ந்து எரிச்சலும் வரும்.

அறிகுறிகள்:

வலி மற்றும் எரிச்சல் சிறுநீர் கழிக்கும் போது இருக்கும். மேகம் போன்றோ, வாடையுடனோ, ரத்தம் கலந்து காய்ச்சலுடன் அடி வயிறு காணப்படும்.

மேல் மார்க்கநோய்:

சிறுநீரகம் மற்றும் யூரேட்டர்களில் பாதிப்பு ஏற்படும். யூரேட்டர் அரிதாக பாதிக்கப்படும். பாதிப்பு ஏற்பட்டு விட்டால் விரைவில் சிறுநீரகத்தை பாதிக்கச்செய்துவிடும்.

அறிகுறி:

அதிக காய்ச்சல், உடல் நடுக்கம், ஜூரம், வாந்தி போன்ற எண்ணம். விலாவிலும் இடுப்பிலும் வலி இருக்கும்.

சிகிச்சை :

இதன் வகைகளை பொறுத்து ஆன்டிபயாடிக் சிகிச்சை அளிக்கலாம். ஆன்டிபயாடிக்களை தகுந்தகால இடைவெளியில் தொடர்ந்து உபயோகிக்க விரைவில் குணமாகும்.

ஆயுர்வேத சிகிச்சை:

நெல்லிக்காய், பேய்புடலை, சீந்தில், வசம்பு, கோரை, நிலவேம்பு, திப்பிலி, கொடுவேலி, கொத்தமல்லி, நெருஞ்சில், வாய் விடங்கம், சுக்கு, மிளகு., பட்டை, ஏலம், குகுலு, தசமூலம், கண்டன் கத்திரி, பூளம்பு, சந்தனம், மாவிலங்கு, குமிழ், பற்படகபுல், திராட்சை, இந்துப்பு, மூங்கில் உப்பு போன்றவற்றால் செய்த மருந்துகள் சிறந்த பலன்தரும்.

தவிர்க்கும் முறை:

குளம் குட்டை, ஆறுகளில் குளிப்பதோ அந்த தண்ணீரை உடல் பட உபயோகிப்பதோ கூடாது. காரணம் பொதுவாக ஆறுகள் தாழ்வாக செல்வதாலும், அந்த வடிகால்களில் மனித கழிவுகள் ஊர் கழிவுநீருடன் ஆறுகளில் கலக்கின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவேண்டும்.

வீட்டு சிகிச்சை:

போதுமானஅளவு நீர் அருந்தவேண்டும். நெல்லிபொடி, மஞ்சள் கலந்த தண்ணீர் சாப்பிட்டு எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா, வாழை, தர்பூசணி, பப்பாளிபழச்சாறு அதிகம் பருகலாம். நாவல்பழம், அன்னா்சிபழம், சாறை அதிகம் பருகுவதுடன், கலாக்காய் இதற்கு சிறந்த மருந்தாகும். கொத்தமல்லி தண்ணீர், கடுகு எண்ணை ஒரு கரண்டி பருகலாம். தினமும் 2 கரண்டி 2 வேளை ஆப்பிள் சீடர் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். சூடான நீரில் துணியை நனைத்து அடிவயிற்றில் சூடு கொடுத்தால் கிருமிகளை கொன்று வலியையும் குறைக்கலாம்.

urine

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதத்தில் கவனிக்க வேண்டியவை!!

nathan

தவறான உணவுக் கட்டுபாடு உடல்நலத்தை கடுமையாக பாதிக்கும்!!!

nathan

கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகள்!!!தெரிந்துகொள்வோமா?

nathan

இந்த ஒரு ஜுஸ் போதும் சர்க்கரை அளவு எப்பொழுதும் கட்டுக்குள்!

nathan

குழந்தை தத்தெடுப்பும்…தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும்!

nathan

உங்களுக்கு பல வித நோய்களை குணமாக்கும் பாட்டி வைத்திய முறைகள் தெரியுமா..!!

nathan

கர்ப்ப காலத்தில் தப்பித்தவறி கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க – பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

மார்பு சளி குறைய யூகலிப்ட்ஸ் தீர்வு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan