ஆஸ்துமா எனும் கிரேக்கச் சொல்லுக்கு மூச்சிரைப்பு, மூச்சு வாங்குதல் என்று பெயர். நுரையீரல், மூச்சு குழல்கள் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளே, ஆஸ்துமாவை உண்டாக்குகிறது. மூச்சுக் குழல்கள் சளியால் அடைத்துக் கொள்வதாலோ, சினியா எனப்படும் சவ்வில் ஏற்படும் அழற்சியினாலோ ஆஸ்துமா ஏற்படலாம்.
ஆஸ்துமாவில் பலவகைகள் உண்டு. மூச்சுக் குழாயின் அளவு குறுகி விடுவதால், சளி அடைப்பு ஏற்பட்டு, மூச்சு இரைப்பு உண்டாவது ஒருவகை. இது, இருதயத்தின் இடது வென்டிரிக்கிள் குறைபாடுகள் காரணமாக தோன்றுகிறது. தூசி, புகை, வாசனை திரவியங்கள்,
ரசாயனங்கள் போன்றவை காரணமாக, அழற்சி ஏற்பட்டு தோன்றும் மூச்சிரைப்பு மற்றொரு வகை.
கோபத்தை அடக்குதல், பயம், தன் குடும்பத்தினரிடம், விருப்பமானவர்களிடம் தவறுகளை சுட்டிக் காட்ட முடியாமல் அடக்கி வைப்பது, மாணவர்கள் ஆசிரியர்களைக் கண்டு பயப்படுவது என, பலவித உணர்ச்சி தடுமாற்றங்களால், ஆஸ்துமா வருவதுண்டு. பரம்பரைத்தன்மை காரணமாகவும் ஆஸ்துமா தோன்றும். ஆஸ்துமாவுக்கு அலோபதியில் ஒரே மாதிரி மருத்துவம் செய்வர். ஓமியோபதி மருத்துவத்தில், முழுமையாக நோயாளியை ஆய்வு செய்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு சிலர் மூச்சை உள்ளிழுக்கவும், வெளியே விடவும் கஷ்டப்படுவர்.
வேறு சிலருக்கு மூச்சை உள்ளே இழுப்பதில் சிரமம் இருக்காது. ஆனால் வெளி விடும் போது மிகுந்த சிரமப்படுவர். சிலருக்கு வெளி விடுவதில் சிரமம் இருக்காது. மூச்சை உள்ளிழுக்கும் போதுதான் சிரமப்படுவர். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, ஓமியோபதியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருதயத்தில் இருந்து மற்ற உறுப்புகளுக்கு, சுத்தப்படுத்தப்பட்ட ரத்தம், தமனி மூலம் செல்கிறது. ஆனால் நுரையீரலுக்கு மட்டுமே, தமனி மூலம் அசுத்த ரத்தம் வருகிறது.
நுரையீரலுக்கு வரும் அசுத்த ரத்தத்திலுள்ள, கரியமில வாயு வெளியேறி, சுத்தமான பிராணவாயுவை பெற்று, சிரை வழியாக சுத்தமான ரத்தம் இருதயத்தின் வலது வென்டிரிக்கிளுக்கு செல்கிறது. எனவே, மூச்சை உள்ளிழுக்கும் போது, செலவிடப்படும் சக்தியை விட, மூச்சை வெளிவிட நுரையீரல் அதிக சக்தியை செலவிடுகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு தேவை.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஜீரண மண்டலத்தில் ஹைட்ரோ குளோரிக் அமிலம், மிக குறைவாக சுரக்கிறது. எனவே ஜீரணத்தன்மை பாதிக்கப்படுகிறது. அதிக உணவு உண்டால் ஜீரணமாகாது. வாந்தி மற்றும் வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொதுவாக இரவு நேரங்களில், ஜீரணமண்டலத்தின் செயல்பாடு மிகவும் குறைவாக இருக்கும். ஆஸ்துமா நோயாளிகள், இரவு நேரங்களில் எளிதில் ஜீரணமாகும், எளிய உணவுகளை, குறைவாக உண்ணவேண்டும்.
குறிப்பாக தயிர், மோர் உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை மூச்சுக் குழாய்களில் பாதிப்புகளை உருவாக்கும். உடல் நலம் உள்ளவர்களுக்கு, பழங்கள் ஊட்டச் சத்து மிக்கவை. ஆஸ்துமா நோயாளிகளுக்கு செரிமானத் தன்மை குறைவு என்பதால், இவர்கள் பழங்களை தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகளின் தனித்தன்மைக்கு ஏற்ப, ஓமியோபதி மருந்துகள் தேர்வு செய்து கொடுக்கப்படுகிறது. இதனால், நோயின் தீவிரம் குறைவதோடு, பின் விளைவுகள் சிறிதும் இல்லாமல், முற்றிலும் குணமாகும் வாய்ப்புகள் அதிகம்.