22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
skin
மருத்துவ குறிப்பு

சிலருக்கு தோல் நோய் வந்து உயிரை எடுக்கும்… மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இதோ, உடனடி தீர்வு…..!!…

நாட்டு வைத்தியம்
“””””””””””””””””””””””””””””””
இந்த… அரிப்பு, படை, அலர்ஜினு வியாதிங்க வந்துட்டா, உடம்புல அங்கங்க தடிச்சிப் போய், பாக்கறதுக்கு கொடுமையா இருக்கும். அதனால, வர்ற அவஸ்தை அதை விட கொடுமையா இருக்கும். இதையெல்லாம் விரட்டியடிக்கறதுக்கு நாட்டுப்புறத்துல ஏகப்பட்ட சங்கதி இருக்கு. அதுல ஒண்ண எடுத்துவிடறேன்… எழுதிக்கோங்க!

தவசுமுருங்கை
“”””””””””””””””””””””””””
தவசுமுருங்கை இலையை
(பல பேரு இது என்ன செடினு தெரியாமலே வீட்டுல வளர்த்துக்கிட்டிருக்காங்க) ஒரு கைப்பிடி எடுத்து இடிங்க.
அதுல கிடைக்கற சாறை குடிச்சா… அரிப்பு, படை எல்லாம் குணமாயிரும். மேலே சொன்ன மருந்தை சாப்பிடுற காலத்துல புளி இல்லாத பத்தியம் இருக்கணும்கிறது முக்கியம். அதை மறந்துட்டு, புளிக்குழம்பு, புளிசாதம்னு மூக்குப்பிடிக்க வெட்டிப்புட்டு, நோய் குணமாகலையேனு இந்த பாட்டியைத் திட்டித் தீர்க்கக் கூடாது.

(மன உளைச்சல்)
பொதுவா, தோல் வியாதிங்க வந்துட்டாலே மனுஷன ஆட்டிப் படைச்சிடும். நாலு இடத்துக்கு பந்தாவா போய் வரக்கூட முடியாத அளவுக்கு கை, கால், முகம்னு வெளியில தெரியற இடத்துலயெல்லாம்கூட பட்டை பட்டையா… சொறி சொறியா… முளைச்சு உயிரை எடுக்கும். இதையெல்லாம் குணப்படுத்தவும் கைவசம் வைத்தியம் இருக்கு….

அருகம்புல்
“””””””””””””””””””
அருகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மையா அரைக்கணும். அதை தோல் வியாதி இருக்குற இடத்துலபூசி, அரை மணி நேரம் கழிச்சு குளிக்கணும். வாரத்துல மூணு நாள், நாலு நாள்னு நம்ம வசதிக்கு ஏத்தாப்புல இப்படி குளிச்சுட்டு வந்தா… நல்ல குணம் தெரியும்.

குப்பைமேனி
“””””””””””””””””””””””
குப்பைமேனி இலை (வீட்டு ஓரங்கள் பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிற இலைகளுடன் காணப்படும் செடி) ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு,கல் உப்பு கொஞ்சம் சேர்த்து அரைச்சு, அரிப்பு கண்ட இடத்துல பூசி, அரை மணி நேரம் கழிச்சு குளியல் போடணும். இதைத் தொடர்ந்து செய்துகிட்டு வந்தா… ஊறல், படை எல்லாம் ஓடிப்போயிரும்.
குணம் தெரிஞ்சுட்டா… மருந்தை கை விட்டுடலாம். பக்கவிளைவுங்கற பேச்சுக்கே இடமில்ல. காலை நேரத்துல உடம்புல பூசி குளிச்சா நல்லது.

வேப்பிலை
“””””””””””””””””””
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்துக்கோங்க, அதோட மூணு சின்ன வெங்காயம் சேர்த்து அரைச்சி உடம்பு முழுசும் பூசி, அரை மணி நேரம் கழிச்சி வெந்நீர்ல குளிச்சாலும், தோல் சம்பந்தபட்ட வியாதிக்கு குணம் கிடைக்கும்.

நன்னாரி
“”””””””””””””””
நன்னாரி வேர் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) 20 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணி சேர்த்து நல்லா காய்ச்சணும். 200 மில்லி ஆனதும் இறக்கிறணும். காலையில நூறு மில்லி, சாயங்காலம் நூறு மில்லினு குடிச்சு வந்தா… தோல் நோய், வந்த இடம் தெரியாம ஓடிப்போயிரும்.
skin

Related posts

கவணம் உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா? அப்ப உடனே இத படிங்க…

nathan

சிசேரியன் தையல் புண் ஆற

nathan

பெண்களே கர்ப்பகாலத்தை இனிமையாக கழிக்க இதை மறக்காதீங்க…

nathan

அதிகமாக நடக்கும் செல்போன் வன்முறை

nathan

எடையைக் குறைக்க கேரள ஆயுர்வேத வைத்தியம் கூறும் சில வழிகள்!

nathan

கட்டியைக் கரைக்கும் சப்பாத்திக்கள்ளி

nathan

பெண்கள் வாழ்க்கையில் தங்களை மேம்படுத்தி கொள்ள டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா உடல்நலம் காக்கும் நல்லெண்ணெய்யின் பயன்கள்…!

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் வெளியே சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று..!

nathan