frigde.jpg.pagespeed.ce .Ce1AtHvKjO
வீட்டுக்குறிப்புக்கள்

குளிர்சாதனப்பெட்டியில் வைத்த அசைவ உணவுகளை சாப்பிடாலமா?

ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என அனைத்தையும் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது தவறானது என்கின்றனர்

ஊட்டச்சத்து நிபுணர்கள்.

காய்கறி, கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது.

குளிர்சாதனப்பெட்டியில் வைத்த இறைச்சியை பயன்படுத்துவது கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நீண்ட நாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்கும் மாமிசத்தில் பாக்டீரியா உருவாகிவிடும்.

அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் உண்டுவிட்டால், இரைப்பையில் நோய் தாக்கிவிடும். இதுபோன்ற இறைச்சியை உண்பதினால் இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, ஈரல், சிறு நீரகம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை பாதிக்கும்.

விஷமாகும் உணவு

இறைச்சியை உடனடியாக கடைகளில் வாங்கிய உடனே வெட்டி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினால்தான் அதில் உள்ள புரத சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

அவ்வாறு இல்லாமல் வார கணக்கில் இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து எடுத்து, பின்னர் அதனை சமைப்பதினால் அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல்லாது, அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு, சமயங்களில் அது விஷ உணவாக மாறவும் வாய்ப்புண்டு என்கின்றனர்.

எளிதில் நோய் தாக்கும்

அதேபோன்று நோய் தாக்கிய ஆடு, மாடு அல்லது கோழி போன்ற இறைச்சியில் வைட்டமின், புரத சத்துக்கள் சிதைந்து போயிருக்கலாம். எனவே இத்தகைய இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உண்பதனால் நோய் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது.

எனவே உணவுகளை தினசரி சமைத்து உண்பதே ஆரோக்கியம் ஆகும்.
frigde.jpg.pagespeed.ce.Ce1AtHvKjO

Related posts

சூப்பர் டிப்ஸ்! நீங்க காதலிப்பவரா! அப்போ நீங்க எந்த வகை காதலர்னு தெரிஞ்சிகங்க

nathan

டெலிவிஷன் எது ரைட் சாய்ஸ்?

nathan

அடேங்கப்பா!வெற்றிலையில் மை வைத்து தொலைவில் நடப்பதை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?

nathan

உங்க குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் கடைபிடிக்க சில முக்கிய விஷயங்கள்!

nathan

வெள்ளி பாத்திரங்கள் பளிச்சிட :

nathan

சூப்பர் டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்… !

nathan

டிப்ஸ்! எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்?

nathan

உங்களுக்கு தெரியுமா ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன?

nathan

சிறிய சமையலறையை அழகாக பராமரிப்பதற்கான எளிய வழிகள்!!

nathan