29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
heartattack 15
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? தெரிந்துகொள்ளுங்கள் !

உயர் கொலஸ்ட்ரால் என்பது ஒரு சிறிய பிரச்சனை மட்டுமல்ல. இது தமனி அடைப்பு மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக்கூடியது. ஆகவே தான் மருத்துவர்கள் ஒவ்வொருவரும் வருடந்தோறும் கொலஸ்ட்ரால் அளவை சரிபார்க்க வேண்டுமென அறிவுறுத்துகிறார்கள். மேலும், ஆரம்பத்திலேயே ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதை தெரிந்து கொண்டால், அது தீவிர பிரச்சனைகளைத் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

அதிலும் உயர் கொலஸ்ட்ராலால் ஒருவரது இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தால், அந்த அடைப்பை நீக்க ஒரு அற்புதமான ஆயுர்வேத பானம்/சிரப் ஒன்று உள்ளது. அந்த பானத்தை தினமும் குடித்து வந்தால், விரைவில் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம். இப்போது அந்த ஆயுர்வேத பானத்தை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

தமனி அடைப்புக்கான காரணம்

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, இதயத்திற்கு செல்லும் தமனிகளில் கொழுப்புக்கள் படிய ஆரம்பிக்கிறது. இதனால் இரத்தம் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. இதன் விளைவாக உடலுக்கு இரத்தத்தை வழங்க இதயத்தில் கூடுதல் சுமை அளிக்கப்படுகிறது மற்றும் பல இதய பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். எனவே உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீரானதாக உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய கொழுப்பு பரிசோதனை மிகவும் அவசியம்.

தமனியில் அடைப்பு ஏற்பட்டால், அந்த அடைப்பை நீக்க விலையுயர்ந்த செயல்முறை தேவைப்படலாம். ஆகவே தமனிகளில் உள்ள அடைப்பை நீக்கி, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத சிரப்பை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

தமனி அடைப்பிற்கான ஆயுர்வேத சிரப்பை தயாரிப்பது எப்படி?

தமனிகளில் ஏற்பட்டுள்ள அடைப்பைப் போக்க மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய 5 பொருட்கள் இருந்தால் போதும். இந்த ஒவ்வொரு பொருட்களிலும் உள்ள மருத்துவ பண்புகள், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, தமனி அடைப்புக்களை நீக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சரி, வாருங்கள் இப்போது அந்த சிரப்பின் செய்முறையைக் காண்போம்.

தேவையான பொருட்கள்:

* இஞ்சி ஜூஸ் – 1 கப்

* பூண்டு ஜூஸ் – 1 கப்

* எலுமிச்சை ஜூஸ் – 1 கப்

* ஆப்பிள் சீடர் வினிகர் – 1 கப்

* தேன் – 3 கப்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியில் தேனைத் தவிர, அனைத்து ஜூஸ்களையும் ஊற்றி அடுப்பில் வைத்து, குறைவான தீயில் 3/4 அளவு வரும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும்.

* பின் அதை இறக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி குளிர வைக்க வேண்டும்.

* கலவையானது குளிர்ந்த பின், அதில் தேனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்பு அதை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி பாட்டில் அல்லது ஜாரில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* இந்த சிரப்பை தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் குடிக்க வேண்டும்.

தமனி அடைப்பை சரிசெய்யும் இதர வழிகள்:

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத சிரப் மட்டுமின்றி, வேறு சில வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் தமனியில் உள்ள அடைப்பை விரைவில் நீக்கலாம். ஆயுர்வேத சிரப்புடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள பிற வழிகளையும் பின்பற்றினால், இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வருவதை முற்றிலும் தடுக்கலாம்.

வழி #1

ஜங்க் உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக உட்கொள்ளும் கலோரியில் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அதிகளவு கலோரிகளானது உடல் பருமனுக்கு வழிவகுப்பதோடு, உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிக்கும்.

வழி #2

நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவில் பூண்டுகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் எவ்வளவுக்கு எவ்வளவு பூண்டு சேர்த்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவு இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும் மற்றும் தமனிகளில் உள்ள அடைப்பும் நீங்கும்.

வழி #3

வெள்ளை அரிசி சாதத்திற்கு பதிலாக கைக்குத்தல் அரிசி சாதத்தை சாப்பிடுங்கள். அதோடு உணவில் மீனை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வழி #4

ஸ்நாக்ஸ் வேளையில் நட்ஸ்களை சாப்பிடுங்கள். அதிலும் பாதாம், வால்நட்ஸ் போன்றவை கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதில் சிறந்தவைகளாகும். ஆகவே உங்கள் டயட்டில் அன்றாடம் நட்ஸ் இருப்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.

வழி #5

நட்ஸ்கள் மட்டுமின்றி விதைகளும் உடலுக்கு பயனளிக்கக்கூடியவைகளாகும். நட்ஸ்களைப் போன்றே பூசணி விதை, ஆளி விதைகளையும் ஸ்நாக்ஸ் வேளையில் ஒரு கையளவு சாப்பிடலாம் அல்லது நீங்கள் சாப்பிடும் சாலட்டுகளின் மீது தூவியும் சாப்பிடலாம்.

வழி #6

உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தால், உடனே அவற்றைக் கைவிடுங்கள். இது சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் உயிர் வாழ ஆசை இருந்தால், இந்த பழக்கத்தை சற்றும் தாமதிக்காமல் உடனே தவித்திடுங்கள்.

வழி #7

முக்கியமாக தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தினமும் குறைந்தது 30-40 நிமிடம் உடற்பயிற்சி அல்லது யோகா பயிற்சியை மேற்கொண்டால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, ஒட்டுமொத்த உடலும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வழி #8

முக்கியமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடுங்கள். அதோடு தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றையும் உட்கொள்ளுங்கள். இவற்றில் உள்ள நார்ச்சத்து, தமனிகளில் உள்ள அடைப்பை நீக்க உதவி புரியும். குறிப்பாக உங்கள் கொலஸ்ட்ரால் அளவை சீரான இடைவெளியில் சோதித்துக் கொள்ளுங்கள்.

Related posts

மருத்துவர் கூறும் தகவல்கள்! தைரொய்ட் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா……

nathan

பல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்!

nathan

தெரிஞ்சிக்கங்க… ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம்?

nathan

கேன்சரை எதிர்த்து போராடும் இஞ்சி

nathan

உடல் எடை அதிகரிக்க உதவும் உலர் திராட்சை!

nathan

உங்கள் கோபம் குறைய வேண்டுமா? தயங்காமல் வெட்டுங்கள்!

nathan

தாய்மையைப் போற்ற ஒரு திருநாள்!

nathan

மனக்கவலையை போக்கும் மருந்தில்லா மருத்துவம்

nathan

தலைசுற்றலை போக்கும் இயற்கை வைத்தியம்

nathan