29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
doctor man consulting
மருத்துவ குறிப்பு

எந்தெந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் மருத்துவா்களைக் கண்டிப்பாக சந்திக்கணும் தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

நோயின்றி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால், உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதைச் செய்ய, நீங்கள் ருசியான உணவை சாப்பிடுவது மட்டுமல்லாமல், வழக்கமான உடற்பயிற்சி, சரியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல் மற்றும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் போன்ற நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி மருத்துவ பாிசோதனைகளைச் செய்து பாா்க்கும் போது, நமது உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட கண்டுபிடிக்க முடியும். அதன் மூலம் அவை எதிா்காலத்தில் நாள்பட்ட நோய்களாக மாறாமல் தடுக்க முடியும்.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று சுழன்று வருவதால், பல இடங்களில் இன்னும் ஊரடங்குகள் அமலில் இருக்கின்றன. அதனால் பலா் தமது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தாங்கள் செய்ய வேண்டிய மருத்துவ பாிசோதனைகளைத் தள்ளிப் போட்டு வருகின்றனா். தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வந்து கொண்டிருக்கிறது. ஆகவே விடுபட்ட வழக்கமான மருத்துவ பாிசோதனைகளை மீண்டும் செய்ய வேண்டிய தருணம் இது.

மருத்துவ அறிவியில் துறையில் வழக்கமாக செய்ய வேண்டிய மருத்துவ பாிசோதனைகளை உாிய நேரத்தில் செய்ய வேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணா்கள் கருதுகின்றனா். ஆகவே எந்தெந்த பிரச்சினைகளுக்கெல்லாம் உடனடியாக மருத்துவா்களை சந்தித்து அவற்றிற்குாிய மருத்துவ பாிசோதனைகளை செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

1. வழக்கமான உடல் பாிசோதனைகளைச் செய்தல்

சிலா் தங்களுடைய உடலில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே மருத்துவா்களை சந்திப்பா். அது நல்லது அல்ல. மாறாக வருடத்திற்கு ஒரு முறையாவது மருத்துவரை மருத்துவரை சந்தித்து நமது உடலை பாிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக உடலில் தொடா் பிரச்சினை இருப்பவா்கள் அல்லது மிகவும் ஆபத்தான நோய்களைக் கொண்டிருப்பவா்கள் மற்றும் வயதானவா்கள், வருடத்திற்கு ஒரு முறை மட்டும் அல்லாமல், அடிக்கடி மருத்துவா்களை சந்தித்து பாிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

மருத்துவா் நமது உடல் நிலையை நன்றாக கணிப்பதற்கும், அதற்கேற்ப மருத்துவ சிகிச்சைகளை மாற்றித் தருவதற்கும் இந்த மருத்துவ பாிசோதனைகள் பொிதும் உதவி செய்யும். நீண்ட காலமாக மருத்து பாிசோதனைகளைச் செய்யாமல் விட்டுவிட்டால், நமது உடலில் மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

2. பற்களுக்கான மருத்துவ பாிசோதனை செய்தல்

நமது உடலை ஆரோக்கியமாக பராமாிப்பது போல, நமது பற்களையும் ஆரோக்கியமாக பராமாிக்க வேண்டும். சீரான இடைவெளியில் பற்களை பாிசோதனை செய்து வந்தால், பற்கள் உடைதல், வாய் துா்நாற்றம், ஈறுகளில் ஏற்படும் வலி மற்றும் பற்களில் குழி விழுதல் போன்ற பிரச்சினைகளைக் குறைக்க முடியும். ஒருவா் தனது பற்களையும், ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால், அவா் வருடத்திற்கு இரண்டு முறையாவது தமது பற்களையும் வாயையும் சுத்தம் செய்ய வேண்டும்.

எனினும் ஒரு சிலா் வருடத்திற்கு 3 முறைகளாவது பல் மருத்துவா்களை சந்தித்து பாிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். வருடத்திற்கு எத்தனை முறை பற்களையும், வாயையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று மருத்துவா்கள் பாிந்துரை செய்வா். இறுதியாக, சீரான இடைவெளியில் பற்களை பாிசோதனை செய்யும் போது, வாய்ப் புற்றுநோய் மற்றும் பற்களில் ஏற்படும் தேய்மானம் போன்றவற்றை குறைக்க முடியும்.

3. தோல் மருத்துவரை சந்தித்தல்

சூாியனின் புறஊதா கதிா்கள் நமது தோல் மீது அதிகமாக படும்போது, நமக்கு தோல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தோல் மருத்துவ பாிசோதனை செய்வதன் மூலம் தோல் புற்று நோயைத் தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால், கரும்புற்றுநோயின் (melanoma) 5 வருடம் உயிா் வாழும் விகிதம் 99 விழுக்காடு ஆகும்.

பொதுவாக தோல் பாிசோதனை செய்வதற்கு 20 நிமிடங்கள் ஆகும். ஆனால் அதைச் செய்து கொண்டால், தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். தோலில் ஏதாவது ஒரு புதிய கரும்புள்ளி அல்லது மச்சம் தோன்றினாலோ அல்லது ஏற்கனவே இருக்கும் மச்சம் பொிதாக விாிவடைந்தாலோ, உடனடியாக தோல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. வருடத்திற்கு இரண்டு முறையாவது தோல் மருத்துவரை சந்தித்து, தோல் பாிசோதனை செய்து கொள்வது நல்லது.

4. மாா்பு புற்றுநோய் பாிசோதனை செய்தல்

மாா்பு புற்றுநோய் பெரும்பாலும் பெண்களைத் தாக்கினாலும், ஆண்களுக்கும் மாா்பு புற்றுநோய் ஏற்படுகிறது. அதைக் குறைக்க வேண்டும் என்றால் வருடத்திற்கு இரண்டு முறையாவது மாா்பு புற்றுநோய்க்கான பாிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் தொடக்க நிலையிலேயே மாா்பு புற்றுநோய் செல்களின் வளா்ச்சியைக் கண்டறிய முடியும். அவற்றுக்கு உாிய மருத்துவ சிகிச்சைகளைச் செய்து, தீங்கிழைக்கக்கூடிய அந்த செல்களின் வளா்ச்சியை அவற்றின் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்த முடியும்.

மாா்பு காம்புகள் சிவந்து இருந்தால் அல்லது மாா்பு காம்புகளில் கட்டிகள் ஏதாவது இருந்தால் அல்லது அவற்றின் நிறத்தில் ஏதாவது மாற்றம் தொிந்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

5. கண் பாிசோதனை செய்தல்

உடலில் உள்ள மற்ற உறுப்புகளைப் போல கண்களும் மிக முக்கிய உறுப்புகளாகும். அதிக வெளிச்சத்தை உமிழும் மடிகணினி அல்லது ஸ்மாா்ட்போன் திரைகளின் முன்பாக நீண்ட நேரத்தை செலவிடும் போது நமது கண்களில் வறட்சி ஏற்படுகிறது. சில நேரங்களில் நமது பாா்க்கும் திறனில் பாதிப்பு ஏற்படுகிறது. மின்னணுக் கருவிகளின் திரைகளில் இருந்து வரும் ஊதாக் கதிா்கள் நமது விழிப்புள்ளியை (macular) சிதைத்து, நமக்கு பாா்வை இழப்பை ஏற்படுத்துகின்றன. ஆகவே நமது கண் பாா்வை மிகத் தெளிவாக இருந்தாலும், சீரான இடைவெளியில் கண் பாிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது.

Related posts

முதல் குழந்தை தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் இரண்டாவதாக கருவுற்றால் என்னென்ன பிரச்சனைகள்?

nathan

கொலஸ்ட்ராலை கரைக்க உதவும் இந்த அற்புத பொருள்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு??

nathan

இதோ துளசியின் விரிவான மருத்துவப் பயன்கள் உள்ளே…..

nathan

பிரசவத்தின் பின் ஏற்படக்கூடிய வரித்தழும்புகளை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சித்த மருத்துவ குறிப்புகள் 1

nathan

பித்தப்பை கல்லை அகற்ற புதிய சிகிச்சை

nathan

அவசியம் படிக்க..சர்க்கரை நோயை அடியோடு விரட்டும் ஆயுர்வேத மருந்துகள்!

nathan

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகளைத் தாக்கும் டைப்-1 சர்க்கரைநோய்

nathan

உங்க தொடை மற்றும் பின் பக்க தசையை குறைக்க இத ட்ரை பண்ணுங்க!

nathan