24.9 C
Chennai
Wednesday, Jan 22, 2025
01 1372661988 6 beauty 600
சரும பராமரிப்பு

25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்

20 வயதுகளில் பல மற்றங்கள் ஏற்படும் – குறிப்பாக உங்கள் உறவுகளில், உங்கள் வளர்ச்சியில், மற்றும் உங்கள் உடல் வளர்ச்சியில்! 25 வயதிற்கு பின்னர், தோல் முதிர்ச்சி, துளைகள், வறட்சி, இருண்ட வட்டங்கள், கோடுகள், மற்றும் சுருக்கங்கள் போன்ற அறிகுறிகள் காட்ட துவங்கும். இதற்கு ஒப்பனை செய்வது ஒரு தற்காலிக தீர்வே தவிர ஒரு நிரந்தர தீர்வாகாது. விரைவாகவோ அல்லது பின்னரோ, பவுண்டேஷனை பயன்படுத்தி விட்டு அழித்து விட வேண்டும் இதனால் உங்கள் கறைகள் தற்காலிகமாக போய்விடும். எனவே உங்கள் தோலிற்கு முக்கியமான தருணத்தில் தேவையானவற்றை பார்த்து செய்ய வேண்டும். இங்கே நீங்கள் 25 வயதிற்கு பிறகும், இளமையாகவும், துடிப்பாகவும், மற்றும் புதியதாக இருக்க உதவும் சில எளிய தோல் பராமரிப்பு குறிப்புகள் உள்ளன.

தோல் பராமரிப்பு 25 வயதிற்கு பிறகு – 10 அருமையான குறிப்புகள்:

1. உங்கள் முகத்தை சுத்தம் செய்யவும்:
இது தோலிற்கு மிகவும் முக்கியமானது. எப்போதும் உங்கள் தோலிற்கு பொருத்தமான க்ளென்சரை தேர்வு செய்யவும். பல விதவிதமான தயாரிப்புகள் உள்ளன. ஒரு நல்ல க்ளென்சர் துளைகளை முற்றிலும் நீகுவதோடு மற்றும் அசுத்தங்கள் சுத்தம் செய்கிறது. மேலும் உங்கள் சருமத்தில் உள்ள ஒப்பனைகளினால் ஏற்படும் தேவையற்ற எண்ணெய் படிவங்களை நீக்கி, உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், புத்துணர்ச்சியோடும் வைத்து இருக்கும். க்ளென்சிங்கை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்வது நன்று. காலையில் ஒரு முறையும், இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு ஒரு முறையும் பயன்படுத்துவது நல்லது.

2. டோனிங்:
டோனிங் எந்த ஒரு தோல் பராமரிப்பிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. நீங்கள் முற்றிலும் தோலை க்ளென்சிங் கொண்டு சுத்தம் பண்ணிய பிறகு, ஒரு நல்ல டோனரை பயன்படுத்துவதால் இது உங்கள் துளைகள் மூடுவதோடு, தோலை இறுக்கமாக்கி, மற்றும் க்ளென்சிங் செய்த பிறகு மிச்சம் இருக்கும் எண்ணெய் பசையையும் நீக்குகிறது. இதற்கென பல விதவிதமான தயாரிப்புகள் சந்தைகள் உள்ளன. இதில் நீங்கள் சிறந்த பொருத்தமான ஒன்றை தேர்வு செய்யலாம். ரோஜா நீர் அனைத்து தோல் வகையினருக்கும் பொருத்தமான சிறந்த டோனர் ஆகிறது.

3. மாய்ஸரைஸிங்:
தோல் வயது ஆக ஆக அதற்கு ஈரப்பதம் நிறைய தேவைப்படுகிறது. இந்த மாதிரியான நேரத்தில், தோல் உலர்ந்து இறுக்கமானதாக தொடங்குகிறது. எனவே, உங்கள் தோலிற்கு ஒரு மென்மையான அமைப்பை கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு நல்ல ஈரப்பதம் குடுத்து அதை ஹைட்ரேட் செய்ய வேண்டும். இதற்கென பல விதவிதமான தயாரிப்புகள் சந்தைகளில் உள்ளன. இதில் நீங்கள் உங்கள் தோலிற்கு சிறந்த பொருத்தமான ஒன்றை தேர்வு செய்யலாம். இதை வாங்கும் முன் இந்த தயாரிப்பு உங்களுக்கு அதிகபட்ச ஈரப்பதத்தினை குடுத்து, விரைவில் ஏற்படும் வயதான தோற்றத்தில் இருந்து தோலை பாதுகாக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலும் உங்கள் கழுத்திற்கும் ஈரப்பதமூட்டுவதை மறக்க வேண்டாம்!

4.எக்ஸ்ப்ளாய்டிங்:
உலர்ந்த மற்றும் வயதான தோலிற்கு மட்டும் எக்ஸ்ப்ளாய்டிங் பயன்படுவதில்லை, இது இறந்த செல்கள் நீக்கி புதிய செல்களை உற்பத்தி செய்கிறது. இதற்கு நீங்கள் நல்ல தரமான தயரிப்புகளை உபயோகப்படுத்த வேண்டும், ஓட்ஸ், ஆரஞ்சு தோல், போன்ற இயற்கை தயாரிப்புகளை கூட பயன்படுத்தலாம். வழக்கமாக செய்யும் எக்ஸ்ப்ளாய்டிங் மூலம் குறைவான சுருக்கங்கள், பிரகாசமான மற்றும் மென்மையான உறுதியான தோலை கொடுக்க முடியும். இதை நீங்கள் வாரம் ஒருமுறை செய்வதால் சிறந்த முடிவுகளையும் அழகான தோலையும் பெற முடியும்.

5. தோல் பாதுகாப்பு:
உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா “வரும் முன் காப்பது நலம்” என்ன மறந்து விட்டீர்களா? சூரியன் உங்கள் தோலை மங்கச் செய்து, கருந்திட்டுக்களையும், தோலையும் சேதப்படுத்தி விடுகிறது. இப்போது ஒன்றும் அதிகம் மோசமாகி விடவில்லை, சூரியனில் இருந்து தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் தோலை பாதுகாக்க. ஒரு தொப்பி, அல்லது ஒரு ஸ்கார்ப் போதும் உங்கள் தோலை பாதுகாக்க. நீங்கள் உண்மையில் உங்கள் தோலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றால், ஒரு சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். சன்ஸ்க்ரீனில் ஒரு குறைந்தபட்ச SPF 15 சான்றுகள் உள்ளதை பயன்படுத்தவும். சன்ஸ்கிரீனில் பலதரப் பட்டவைகள் உள்ளன. நீங்கள் உங்களுக்குக்கு பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து உங்கள் தோலிற்கு தேவையான நன்மைகளை கொடுக்கவும்.

6. முகத்திற்கான மசாஜ்:
பேசியல் உங்கள் முகத்தினை நல்ல முறையில் வைத்திருக்க உதவும் சிறந்த வழி ஆகும். 25 வயதிற்கு பின்னர் உங்கள் சருமத்தினை பார்த்துக்கொள்வதற்கான அற்புதமான குறிப்பு இது. இதிஅ செய்வதால் உங்கள் காம்ப்ளக்சனை நீக்கி மற்றும் முகத்திற்கு உடனடியான பிரகாசத்தினை தருகிறது. ஒரு புகழ்பெற்ற தொழில்முறை நிபுணர் மூலம் ஒரு நல்ல முக அமைப்பிற்கு உங்கள் தோலை நன்கு சுத்தபடுத்தி புத்துணர்ச்சியோடு வைத்து இருக்க உதவுவார்கள். ஒரு முக மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் தோலை சுத்தப்படுத்தி மற்றும் சுருக்கங்களை தடுக்கும். நீங்கள் முக மசாஜ் செய்த பின்னர் ஒரு நல்ல புத்துணர்ச்சியை உங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பெறுவீர்கள் உறுதியாக!

7. ஃபேஸ் பேக் / முக மசாஜ்:
ஃபேஸ் பேக் பொதுவாக முகத்திற்கு போடப்படும் பேசியலில் ஒரு பகுதியாக உள்ளது. எனவே நீங்கள் உங்கள் தோலை இறுக்கமானதாக மாற்றவும் மற்றும் உங்கள் தோலிற்கு புத்துயிர் கொடுக்கவும் ஃபேஸ் பேக் மற்றும் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். நீங்கள் முட்டை, தேன், கடலை மாவு, ரோஸ் வாட்டர், பாதாம் எண்ணெய் போன்ற வீட்டிலேயே கிடைக்கும் இயற்கை பொருட்களை கொண்டு நீங்களே சொந்தமாக ஃபேஸ் பேக் மற்றும் மாஸ்க்குகள் தயார் செய்யலாம். இந்த ஃபேஸ் பேக் / மாஸ்க்கை வாரம் ஒரு முறை பயன்படுத்துவதன் மூலம் இளமையான மற்றும் இறுக்கமான தோலை பெற இது உதவும்.

8. முதுமையை விரட்டும் தயாரிப்புகள்:
பெரும்பாலான முதுமையை விரட்டும் தயாரிப்புகளில் வயதான தோற்றத்தின் அறிகுறிகளோடு போராட உதவி செய்யும் பொருட்களை கொண்டிருக்கும். நீங்கள் இந்த தயாரிப்புகளை உங்கள் இருபதுகளில் தொடக்கத்திலேயே பயன்படுத்த நினைத்து இருப்பீர்கள், அவ்வளவு சீக்கிரம் தேவை இல்லை முதுமையை விரட்ட நீங்கள் 30களின் தொடக்கத்தில் இதற்கு தேவையான பொருட்களை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இந்த பொருட்களை பயன்படுத்துவதால் கோடுகள் மற்றும் சுருக்கங்களினால் ஏற்படும் முதுமை தோற்றத்தினை தடுக்கின்றன. மேலும் இவை கொலாஜன் உற்பத்தியினை ஊக்குவித்து மற்றும் தோல் நெகிழ்ச்சியடைவதை கட்டுப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஆல்பா ஹைட்ராக்சில் அமிலங்கள் உள்ள பொருட்கள் (AHA’s), ரெடினால், வைட்டமின் A, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, மற்றும் பிற இயற்கை பொருட்கள் இருக்கும் பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் இந்த பொருட்களை தயாரிப்பாளார் அறிவுரையின் படி அட்டையில் அச்சிடப்பட்டுள்ள முறைகளை கொண்டு உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டும்.

9. தோல் பராமரிப்பு:
நம் வயது அதிகரிக்க அதிகரிக்க, நமது தோலிற்கு மேலும் வாழ்வாதாரம் வேண்டும். எனவே நாம் ஆண்டியாக்ஸிடண்ட்கள் அதிகமுள்ள பொருட்களை பயன்படுத்தி நமது தோலிற்கு தேவையான உணவை வழங்க வேண்டும், வைட்டமின் A, E, மற்றும் பிற இயற்கை பொருட்களையும் பயன்படுத்த வேண்டும். இதனுடன் சேர்த்து இந்த ரேடிகள்ஸை பயன்படுத்தி நம் தோல் வயதாவதை தடுக்க வேண்டும். தோல் உறுதியாவதற்கும், நெகிழ்ச்சியை மேம்படுத்தவும், மற்றும் தோல் மென்மையானதாகவும் இது செய்யும். அதிகபட்ச நன்மைகளை பெற இரவில் இந்த கிரீம்களை பயன்படுத்தவும்.

10. டயட்:
ஒரு சீரான, சத்தான உணவு உட்கொள்வது உங்கள் ஒளிரும் தோலிற்கு பின்னால் இருக்கும் ஒரு இரகசியமாகும். நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள், நிறைய சாப்பிடுவதோடு, ஆண்டியாக்ஸிடண்ட்கள் உள்ல உணவை அதிகம் சேர்த்துக் கொள்வது உங்கள் உடலை நன்கு சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் உணவில் கார்போஹைட்ரேட் அளவு, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஆரோக்கியமான தோலிற்கு மிகவும் அவசியம். குறைந்தது 6 முதல் 8 டம்ளார் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
01 1372661988 6 beauty 600

Related posts

தெரிஞ்சிக்கங்க…ஷேவ்விங் செய்வது பற்றி மக்களின் மத்தியில் இருக்கும் தவறான கருத்துக்கள்!

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் பழத்தோல்!

nathan

தேமலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு!

nathan

சூரியகாந்தி எண்ணெயை தோல், முடி மற்றும் சருமத்திற்கு 11 சிறந்த நன்மைகள்

nathan

இதை முகத்தில் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இளமையாக மாறும்…..

sangika

நயன்தாராவின் அழகிற்கு முக்கிய காரணமான தேங்காய் எண்ணெய்

nathan

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் குங்குமப்பூ!

nathan

சருமத்தில் ஏற்படும் முதன்மையான 5 நோய்கள்!!!

nathan

சோர்வை போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்

nathan