maxresdefault 1
சமையல் குறிப்புகள்

நோய்களை அண்டாமல் தடுக்கும் வேர்க்கடலை சாதம் தயார் செய்வது எப்படி?தெரிந்துகொள்ளுங்கள் !

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் சத்தான உணவுகள், வேர்க்கடலையை நிறைய சாப்பிடுகிறார்கள்.

தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட வேர்க்கடலை வெப்பமண்டல நாடுகளில் பரவலாக பயிரிடப்படுகிறது.

வேர்க்கடலையில் புரதம், பாஸ்பரஸ், தயாமின் மற்றும் நிகோடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதில் உள்ள எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். இது ஒரு சிறந்த மலமிளக்கியாகவும், சருமத்தை பளபளப்பாகவும் செய்கிறது.

பல்வேறு நன்மைகள் கொண்ட கடலையை வைத்து சுவையான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்
வேர்க்கடலை பொடி செய்ய தேவையானவை

வேர்க்கடலை- 1/2 கப்
எண்ணெய்- 1 டீஸ்பூன்
எள்ளு- 2 டீஸ்பூன்
கடலை பருப்பு- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 4 அல்லது 5
துருவிய தேங்காய்- 3 டேபிள் ஸ்பூன்

மற்ற பொருட்கள்

சாதம்- 4 கப்
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வேர்க்கடலை- சிறிதளவு
கருவேப்பிலை, உப்பு- தேவையான அளவு

பல நோய்களை அண்டாமல் தடுக்கும் வேர்க்கடலை சாதம் தயார் செய்வது எப்படி? | Peanut Rice In Tamil

செய்முறை
கடாயை முதலில் அடுப்பில் வைத்து வேர்க்கடலையை தனியாக வறுத்துக் வைத்துக் கொள்ளவும்.

பின்னர் கடாயை எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும், நன்றாக பொரிந்து வந்ததும் எள்ளு சேர்த்துக் கொள்ளவும்.

இதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதங்கிய பின்னர் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து வதக்கவும்.

இந்த கலவையை நன்றாக ஆறவிட்டு, ஏற்கனவே வறுத்து வைத்துள்ள வேர்க்கடலையுடன் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றியதும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து விட்டு கருவேப்பிலை சேர்க்கவும்.

இதனுடன் சிறிதளவு வேர்க்கடலை சேர்த்து வறுத்த பின்னர், சாதம், ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு நன்றாக கிளறிவிட்டால் சுவையான வேர்க்கடலை சாதம் தயார்!!!

 

Related posts

சுவையான காளான் பொரியல்

nathan

கல்யாண வீட்டு வத்தக்குழம்பு!

nathan

சுவையான… தட்டைப்பயறு குழம்பு

nathan

சுவையான பிரட் சாட் ரெசிபி

nathan

முந்திரி சிக்கன்

nathan

சுவையான தயிர் பூரி

nathan

ருசியான பிரட் உப்புமா

nathan

மணமணக்கும்.. மணத்தக்காளி வத்தக் குழம்பு

nathan

ருசியான சீஸ் பாஸ்தா செய்வது எப்படி?

nathan