c89a25 1502457247914
கை பராமரிப்பு

அக்குள் கருமையை போக்கும் பழங்கள்

சிலருக்கு அக்குள் கருமையாக இருக்கும். இதனால் ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிய முடியாமல் கவலைப்படுவார்கள். இதனை சில எளிய இயற்கை வழிகளின் மூலம் நீக்கலாம். அதிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டே அக்குள் கருமையை எளிதில் போக்கலாம்.

• எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அக்குளில் மசாஜ் செய்து உலர வைக்க வேண்டும். பின் மீண்டும் இச்செயலை செய்து உலர்ந்ததும், குளிர்ந்த நீரின் மூலம் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் அக்குள் கருமையைப் போக்கலாம்.

• வெள்ளரிக்காய் ப்ளீச்சிங் தன்மையையும் கொண்டது. அதற்கு வெள்ளரிக்காயைக் கொண்டு அக்குளை மசாஜ் செய்து உலர்ந்ததும், தயிரைத் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், அக்குள் கருமையை விரைவில் போக்கலாம்.

• ஆரஞ்சு தோலை உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் சிறிது ஆரஞ்சு பொடியை எடுத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 15 நிமிடம் உலர வைத்து கழுவ, அக்குள் கருமை நீங்கும்.

– இப்படி பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு அக்குளைப் பராமரித்த பின், அக்குளில் டியோடரண்ட் அல்லது பெர்ஃப்யூம் அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம் வெதுவெதுப்பான நீரில் நல்ல குளியலை மேற்கொண்டு, அக்குளை இறுக்காத அளவில் தளர்வான உடைகளை அணிய வேண்டும்.c89a25 1502457247914

Related posts

கைவிரல் மூட்டுக்களில் அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க உதவும் சில எளிய வழிகள்!

nathan

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika

விரல் நுனிகளில் தோல் உரிவதை தடுக்க

nathan

கைகள் மென்மையாக இருக்க மெடிக்யூர்

nathan

கை மட்டும் வெயிலால கருப்பாயிடுச்சா? அதை சீக்கிரமாக போக்கும் வீட்டு வைத்தியங்கள்!

nathan

அக்குளில் கருமை விடுபட 10 பயனுள்ள குறிப்புகள்!

nathan

கை, கால் மூட்டு அழகாகவும் மென்மையாகவும் இருக்க‍ டிப்ஸ்

nathan

உங்க பொன்னான கைகள்…!

nathan

உங்கள் கைகள் சொரசொரப்பாக, கடினமாக இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க.

nathan