28 C
Chennai
Wednesday, Nov 13, 2024
brinjal curry 1
சமையல் குறிப்புகள்

இலங்கை ஸ்பெஷல் கத்திரிக்காய் கிரேவி!ஆஹா பிரமாதம்

கீழே இலங்கை ஸ்பெஷல் கத்திரிக்காய் கிரேவி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பெரிய கத்திரிக்காய் – 1

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் (பொரிப்பதற்கு)

மசாலாவிற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 3

* கடுகு – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* புளி பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* கெட்டியான தேங்காய் பால் – 200 மிலி

* தண்ணீர் – 250 மிலி

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

* பின் கத்திரிக்காயை கழுவி, 2 இன்ச் நீளமுள்ள மெல்லியத் துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நிறம் மாறாமல் இருக்க உப்பு கலந்த நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கத்திரிக்காயைப் போட்டு, சிறிது உப்பு தூவி, பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* பின் அதில் தக்காளியைப் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாக வேகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் உப்பு, கரம் மசாலா, புளி பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இப்போது தேங்காய் பால் மற்றும் நீரை ஊற்றி, மூடி வைத்து, கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க வைத்து, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, இறுதியில் வறுத்து வைத்துள்ள கத்திரிக்கயை சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான இலங்கை கத்திரிக்காய் கிரேவி தயார்.

Related posts

பருப்பில்லாத இன்ஸ்டன்ட் சாம்பார்

nathan

சூப்பரான மொறு மொறு தோசை

nathan

சுவையான கத்தரிக்காய் வறுவல் – Brinjal / Eggplant Fry

nathan

சுவையான ஆப்பம்… இப்படி அரிசி அரைச்சு சுடுங்க!

nathan

சமையல் மட்டும் முக்கியம் இல்லை இவற்றையும் கருத்தில் எடுங்கள்!

sangika

மீல் மேக்கர் ப்ரை

nathan

சுவையான பன்னீர் நெய் ரோஸ்ட்

nathan

உங்களுக்கு தெரியுமா தேங்காய் எண்ணெயை எப்போதெல்லாம் பயன்படுத்தக்கூடாது?

nathan

சன்னா பட்டர் மசாலா

nathan